இந்திய கிரிக்கெட்

நான் கவனிச்சேன்.. ரிஷப் கில் ஹிந்தியில சத்தமா பேசினாங்க.. அவர் வேணும்னே கீழ விழறதில்ல – சச்சின் பாராட்டு

இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் பவுலரின் மூளையில் விளையாடுகிற சம்பவத்தை தான் உற்று கவனித்ததாக இந்திய லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மூவரும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள்.

வெளியே வந்த ரிஷப் பண்ட்

நேற்றைய போட்டியில் தன்னுடைய வழக்கமான அதிரடியில் சில பந்துகளை மட்டுமே விளையாடி இருந்த ரிஷப் பண்ட் இன்று முழுவதுமாக தன்னுடைய அதிரடியான பாணியில் விளையாடினார். மேலும் கில் உடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி வந்தார். மேலும் 99 ரன்னில் இருந்த பொழுது சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார்.

மேலும் இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர் சோயல் பஷீர் வீசிய பந்தை கீழே விழுந்து கீழ்பபருக்கு பின்னால் தட்டி விட்டு பவுண்டரி அடித்தார். பின்புறமாக ஸ்லீப்பில் ஒரு ஃபீல்டர் இருந்த பொழுதும் கூட ரிஷப் பண்ட் மிகத் திறமையாக அந்த ஷாட்டை விளையாடினார். இதை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் தெரிந்து செய்கிறார்

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் கீழே விழுந்து பெடல் ஸ்லீப் விளையாடுவது தற்செயலான விபத்து கிடையாது. அது வேண்டுமென்றே செய்யப்படும் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு விஷயம். அவர் இப்படி சரிந்து கீழே விழுவதால் பந்துக்கு கீழே வந்து லெக்க் ஸ்லிப்பில் நிற்பவரிடம் பந்து செல்லாமல் கட்டுப்படுத்தி அடிக்க முடிகிறது”

இதையும் படிங்க : 471 ரன்.. 23 வருடங்கள் அதே மைதானம்.. மீண்டும் சாதித்த இந்தியா.. வானிலையால் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்

“சோயப் பஷீர் பந்துவீச்சின் போது வேறு ஒரு சுவாரசியமான விஷயத்தை நான் பார்த்தேன். ரிஷப் பண்ட் மற்றும் கில் இருவரும் இந்தியில் மிக சத்தமாக பேசிக் கொண்டார்கள். இது சாதாரணமான உரையாடல் கிடையாது. இவர்கள் இருவரும் சோயப் பஷீர் மூளையில் விளையாடி அவரது பந்துவீச்சு உடைப்பதற்காக செய்தார்கள். இந்த விவரங்கள் எல்லாம் ஸ்கோர் போர்டில் வராது. ஆனால் போட்டியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by