இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்ஸ்மேன் ஒரு இன்னிங்ஸில் மூன்று பேர் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆட்டத்தை அமைத்த ஜெய்ஸ்வால் – ரிஷப் பண்ட்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 159 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 101 ரன்கள் எடுத்தார். மேலும் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். இந்திய அணி நேற்று முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் கில் 227 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 178 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய அணி 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டங்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
23 வருடம் மீண்டும் அதே சம்பவம்
23 வருடங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே போட்டியில் ஒரே இன்னிங்சில் ராகுல் டிராவிட் 148, சச்சின் டெண்டுல்கர் 193, சௌரவ் கங்குலி 128 ரன்கள் என மூவரும் சதம் அடித்து அசத்தியிருந்தார்கள். தற்பொழுது மீண்டும் இதே மைதானத்தில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஒரே இன்னிங்சில் சதம் அடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த ஆடுகளம்.. திடீரென்று விக்கெட்டுகளை கொத்தாக இழந்த இந்தியா.. இங்கிலாந்து ஆட்டத்திற்குள் வந்தது எப்படி?
தற்பொழுது மழை தூறல் ஆரம்பித்திருக்கிறது. வானம் மேகமூட்டமாக இருப்பதால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கும். இந்திய பந்துவீச்சாளர்கள் இதை பயன்படுத்தி இன்று விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தால், இந்த போட்டியை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






