“சச்சின் ஸார் டிப்ஸ்தான் காரணம்.. அவர்கிட்ட ஒன்னு சொன்னேன்.. அதை செஞ்சுட்டேன் ” – இப்ராகிம் ஜட்ரன் பிரமிப்பான பேச்சு!

0
1265
Ibrahim

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இந்த போட்டியில் வெல்வது ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் மிகப்பெரிய வாய்ப்பை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21, ரஹமத் ஷா 30, கேப்டன் ஷாகிதி 26 ஓமர்ஸாய் 22, முகமது நபி 12 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

ஆனால் இன்னொரு முனையில் மிக உறுதியாக நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தவுடன் சதத்தையும் கடந்து அசத்தினார். ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பை வரலாற்றில் முதல் சதம் அடித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார்.

இறுதி கட்டத்தில் ரஷித் கான் உள்ளே வந்து அதிரடியில் ஈடுபட்டார். 18 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். இப்ராகிம் ஜட்ரனும் ஆட்டம் இழக்காமல் 143 பந்துகளில் எட்டு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் எடுத்திருக்கிறது!

- Advertisement -

சதம் அடித்த பிறகு பேசிய இப்ராகிம் ஜட்ரன் “உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இன்னும் பல சதங்கள் அடிக்க வேண்டும். இந்த போட்டிக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.

பாகிஸ்தான் ஆட்டத்தில் நான் சதத்தை தவற விட்டேன். அதை இந்த ஆட்டத்தில் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். மேலும் அடுத்த மூன்று போட்டிகளில் ஒரு சதம் அடிக்க நினைத்திருந்தேன்.

பந்து இங்க பேட்டுக்கு நன்றாக வந்தது. எனவே இங்கு 280 முதல் 300 ரன்கள் எடுப்பது சரியாக இருக்கும் என்று செய்தி அனுப்பி இருந்தேன். சில டிக்கெட்டுகள் கையில் இருந்தால் 300 முதல் 330 ரன்கள் எடுக்க முடியும். அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் சரியாக அமையாததால் முடியவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் ரஷீத் வந்து அதிரடியாக விளையாடினார். கிடைத்திருக்கும் ரன்கள் சரியானதுதான் அதற்கு ஏற்றபடி நாங்கள் செயல்படுவோம்.

நான் நேற்று சச்சின் சாருடன் நிறைய பேசினேன். என்னால் வெளிப்படுத்த முடியாத பல அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். சச்சின் அவர் கொடுத்த இன்புட்ஸ் எனக்கு மிகவும் உதவியது. 24 வருடங்கள் விளையாடி இருக்கும் அவர் போன்ற ஒருவர் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அவருடன் பேசும் பொழுது நான் இந்த போட்டியில் அவர் போல விளையாடி சதம் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். அவர் எனக்கு நல்ல நம்பிக்கையையும் ஆற்றலையும் கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார்!