“சச்சின் ஒரே பந்தில் விளையாடினார்.. கோலி அப்ப எங்களோட விளையாடி இருந்தால்..” – அக்தர் கருத்து

0
591
Virat

இந்த காலக்கட்டத்தில் மிகச்சிறந்த பேட்மேனாக இந்திய அணியின் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அவர் இதுவரை விளையாடி சேர்த்து வைத்திருக்கும் ரன்களின் அடிப்படையில், அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளும் ஏதாவது ஒரு பொது சாதனை வந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குறித்த பேட்ஸ்மேனாக விராட் கோலி வந்தார்.

- Advertisement -

மேலும் நடைபெற்ற அந்த குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவரான சச்சினின் 49 சதங்களை முறியடித்து 50ஆவது சதத்தை அடித்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய உலகச் சாதனையைப் படைத்தார்.

நடுவில் இரண்டு ஆண்டு காலம் அவருக்கு பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத சரிவு உண்டானதில் இருந்து மீண்டு வந்த பிறகு, அவருடைய பேட்டிங் மீண்டும் புதிய உச்சத்தை தொட ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் ” ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்களும் ஒரே பந்து பயன்படுத்தப்பட்ட காலத்தில் சச்சின் விளையாடினார். இதன் காரணமாக பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிந்தது.

இன்று இரண்டு பந்துகள் பயன்படுத்தும் காலத்தில் சச்சின் விளையாடி இருந்தால் நிறைய ரன்கள் குவித்து இருப்பார். மேலும் அந்த காலகட்டத்தில் ரிக்கி பாண்டிங் மற்றும் பிரைன் லாரா ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தார்கள். மேலும் வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்னே போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் விராட் கோலி அந்த காலத்தில் விளையாடி இருந்தாலும் இவர்களோடு போட்டியிட்டு இருப்பார்.

விராட் கோலி அன்று விளையாடி இருந்தால் கொஞ்சம் சிரமங்களை எதிர்கொண்டு இருக்கலாம். ஆனால் அவர் இப்போது அடித்திருக்கும் ரன்களை அப்போதும் அடித்திருப்பார். இதே போன்ற அவரது பேட்டிங்கை நாங்கள் சந்தித்திருப்போம்.

ஆனாலும் வாசிம் அக்ரமை சந்தித்து விளையாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. விராட் இந்த சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன். ஆனாலும் அவர் இரண்டு காலங்களிலும் ஒப்பிடலாம். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் அவர் நூறு சதங்களை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.