சச்சின் பெரிசா? கோலி பெருசா? நச்சென்று முற்றுப்புள்ளி வைத்த இலங்கை லெஜண்ட் சமிந்தா வாஸ்!

0
5418
Vaas

இந்திய கிரிக்கெட் என்பதை தாண்டி உலகக் கிரிக்கெட்டிலும் பொதுவாக இருக்கும் கேள்விகளில் முக்கியமான கேள்வி சச்சின் பேட்டிங்கில் படைத்துள்ள சாதனைகளை உடைக்க போகும் வீரர் யார்? என்பதே!

சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக தமது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நூறு சதங்கள் அடித்திருக்கிறார். இந்தச் சாதனையை எந்த வீரரால் முறியடிக்க முடியும்? என்பது ஒரு புறமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 51 சதங்களை யார் முறியடிப்பார்கள் என்பது இன்னொரு புறமாகவும் இருக்கிறது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைக்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட்டை வைத்து பேசி வருகிறார்கள். அதேபோல் சச்சினின் ஒட்டுமொத்த சர்வதேச சதம் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 49 சதங்களை யார் உடைப்பார்? என்கின்ற கேள்விக்கு விராட் கோலியை வைத்து பேசி வருகிறார்கள்.

இது தொடர்பாக இலங்கையின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் இடம் கேட்கப்பட்ட பொழுது
“சாதனைகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காகத்தான். சாதனைகளை எப்பொழுதும் அப்படியே வைத்துக் கொண்டிருக்க முடியாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் வந்தது வேறு விதமான வீரர்கள்.

விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் செயல்படும் விதத்தில் இளமையாக இருக்கிறார். இங்கு வயது என்பது ஒரு எண்தான். அவர் இந்திய கிரிக்கட்டுக்கு இன்னும் சில காலங்கள் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். இந்தியா பல்வேறு தலைமுறைகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

பெரும்பாலான மக்கள் எப்பொழுதும் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர் முன்பு எப்பொழுதும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். இந்த காரணத்தால்தான் அவர் சரிவர விளையாட முடியாமல் போனால், மக்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

ஒரு வீரர் டச்சில் இல்லாமல் போகலாம். ஆனால் அவர்களின் தரம் என்பது எப்பொழுதும் போகாது. விராட் கோலியை எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கூட சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னேறி செயல்பட விரும்புகிறார். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் உறுதியாகவே நம்புகிறேன்.

இதே போல்தான் சச்சினின் இரண்டாவது பகுதியில் அவரிடம் சிறப்பான ஆட்டத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவராலும் சில நேரங்களில் முடியாமல் போயிருக்கிறது. ஏனென்றால் அப்படி எல்லா நேரத்திலும் எல்லோராலும் முடியாது. தற்பொழுது விராட் கோலிக்கு நடந்ததும் அதுதான். அதே சமயத்தில் அவரது பேட்டிங் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் மிகவும் நன்றாகவே இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!