சச்சினின் 18 வருட ரெக்கார்ட் முடிவுக்கு வந்தது.. குல்தீப் யாதவ் புதிய சாதனை!

0
881
Kuldeep

இந்திய அணி நேற்று பதினாறாவது ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில், மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணிக்கு இது நல்ல அறிகுறி!

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எல்லாவிதமான துறைகளிலும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அணிக்கு தேவையான வீரர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் சரியான விஷயங்கள் வெளியே வந்தன.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீரர்கள் இசான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதற்கு அடுத்து நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் மூன்று மற்றும் ஐந்தாவது இடத்தில் வந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

அதேபோல் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் காயத்திலிருந்து திரும்பி வந்த ஜஸ்ட்பிரித் பும்ரா, முகமது சிராஜ், சர் தூள் தாக்கூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அருமையான துவக்கத்தை பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

மிகக்குறிப்பாக இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிகப்பெரிய ஆயுதமாக உலக கோப்பையில் இருப்பார் என்று கணிக்கப்படுகின்ற சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு அதிரடியான செயல்பாட்டை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக முடக்கினார்.

நேற்றைய போட்டியில் எட்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய குல்தீப் யாதவ், அதில் 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார். மத்திம ஓவர்களில் இவரின் இந்த செயல்பாடு எதிரணிகளை இந்தியா கட்டுப்படுத்த மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நேற்றைய செயல்பாட்டின் மூலம் குல்தீப் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் ஐம்பது ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது, வெங்கடேஷ் பிரசாத் 27 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியது ஆகிய இரண்டு சாதனைகளை முறியடித்திருக்கிறார். சௌரவ் கங்குலி 16 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் வீழ்த்தியதே, பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சு சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!