சச்சின் கெயில் ரோகித்.. பல சாதனைகளை உடைத்த விராட் கோலி.. 4 மாஸான ரெக்கார்டுகள் ஒரே போட்டியில் வந்தது!

0
3074
Virat

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் குவித்ததன் மூலமாக, பல அற்புதமான சாதனைகளை படைத்திருக்கிறார்.

ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன், ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் சேஸ் செய்யும் பொழுது அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன், ஐசிசி தொடர்களில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த மூன்று சாதனைகள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா வடிவங்களிலும் சேர்த்து அதிவேகமாக 26 ஆயிரம் ரன்கள் சேர்த்த வீரர் என்கின்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். இந்தச் சாதனையில் சச்சின் டெண்டுல்கரை இரண்டாவது இடத்திற்கு தள்ளி இருக்கிறார்.

ஐசிசி வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள்:

2959 – விராட் கோலி*
2942- கிறிஸ் கெய்ல்
2876 – சங்கக்கரா
2858 – ஜெயவர்த்தனே
2719 – சச்சின் டெண்டுல்கர்
2687 – ரோஹித் சர்மா
2422- ரிக்கி பாண்டிங்

- Advertisement -

ஐசிசி வெள்ளைப்பந்து போட்டிகளில் சேஸிங் செய்யும் போது 1500 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி!

1500- விராட் கோலி*
1466 ரோஹித் சர்மா
1350 கிறிஸ் கெய்ல்
1301 – ஜாக் காலிஸ்

ஐசிசி போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்:

11 – விராட் கோலி*
11- கிறிஸ் கெய்ல்
10- சச்சின் டெண்டுல்கர்
10- ஷேன் வாட்சன்
10-ஜெயவர்த்தனே
9- ரோஹித் சர்மா
9- யுவராஜ் சிங்
9 – ஏபி டிவில்லியர்ஸ்
9- சனத் ஜெயசூர்யா

26000 சர்வதேச ரன்களை மிக வேகமாக கடந்த பேட்ஸ்மேன்கள்:

567 இன்னிங்ஸ் – விராட் கோலி*
600 இன்னிங்ஸ்- சச்சின் டெண்டுல்கர்
624 இன்னிங்ஸ் – ரிக்கி பாண்டிங்
625 இன்னிங்ஸ் – குமார் சங்கக்கரா

தற்பொழுது இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 250 ரன் மேல் எடுத்து அதிக ரன் அடித்தவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். லீக் சுற்றில் இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. இதில் மேற்கொண்டு அவர் இதே பார்மை தொடர்பு பட்சத்தில், நிறைய சாதனைகள் உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்பொழுது இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.