ஜெய்ஸ்வாலுக்கு சச்சின் வாழ்த்து ; மேலும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களும் வாழ்த்து; விபரம் உள்ளே!

0
371
Jaiswal

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் தற்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் முதல்முறையாக வாய்ப்பு பெற்ற இளம் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார். மேற்கொண்டு ஆட்டம் இழக்காமல் அவர் 143 ரன்கள் எடுத்து களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுவரை அவர் ஆடியதில் 17வது வீரராக அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர், வெளிநாட்டில் துவக்க பார்ட்னர்ஷிப் அதிகம் கொடுத்த வீரர்களில் ஒருவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்று சாதனைகளை படைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வெளியில் நிறைய பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் வீரர்கள் அவருடைய பேட்டிங் திறமை எப்படியானது அவர் எப்படியான தொழில்நுட்பத்தை வைத்திருக்கிறார் என்று பாராட்டி புகழ்ந்து கூறி வருகிறார்கள்.

மேலும் சமூக வலைதளத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஜெயஸ்வால் சதத்தை பாராட்டி புகழ்ந்து அதிக அளவில் பதிவுகள் இட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் அவரது விளையாட்டு ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த சதம் அவருக்கு கூடுதல் வெளிச்சத்தையும் புகழையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகின்ற சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “உங்கள் பயணம் ஆரம்பித்து இருக்கிறது. மிக அற்புதமான சதம்!” என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவருமே உள்நாட்டு கிரிக்கெட்டை மும்பை அணிக்காக விளையாடியவர்கள் என்பது மிக குறிப்பிடத்தக்கது.

இதே போலவே இன்னொரு மும்பை வீரரான வாசிம் ஜாஃபர் அருமையான ஆட்டம் என்று ஜெயசுவாலை பாராட்டி இருக்கிறார். இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் ” மிக மிக அற்புதமான தொடக்கம் அருமையாக விளையாடினாய் !” என்று பாராட்டி இருக்கிறார்.

இந்திய வீரர்கள் மற்றும் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசீத் மலிங்காவும் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று மேற்கொண்டு ஜெய்ஸ்வால் விளையாடுகையில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் சில சாதனைகளை அவரால் படைக்க முடியும். தொடர்ந்து விளையாடி அவர் இரட்டை சதம் அடித்தால் அது மிகப் பெரிய சாதனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.