சச்சின் பேர்ஸ்டோ சாதனை காலி.. ரச்சின் ரவீந்திரா 2 மெகா ரெக்கார்டை உடைத்தார்.. உலக கோப்பை புது வரலாறு!

0
865
Rachin

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியை எதிர்த்து பெங்களூர் மைதானத்தில் விளையாடி வருகிறது.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு நியூசிலாந்து அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியில் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இன்று போட்டி நடைபெறும் பெங்களூரில் மழை ஆபத்து நிறைய இருந்தது. இதன் காரணத்தால் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நடப்பு உலகக்கோப்பை தொடர் முழுவதுமே மிகவும் மோசமாக விளையாடி வரும் இலங்கை அணியின் செயல்பாடு இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது.

இலங்கை அணியின் குசால் பெரேரா அதிரடியாக 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் தீக்ஷனா ஆட்டம் இழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் 46.4 ஓவரில் 171 ரன்கள் எடுத்து இலங்கை அணி சுருண்டது. ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் மிகச் சிறப்பான அதிரடியான துவக்கம் தந்து வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்தரா 20 ரன்களை கடந்த பொழுது, அறிமுக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்கின்ற சாதனையை படைத்தார்.

தற்போது இவர் 550 ரன்களை உலகக்கோப்பையில் கடந்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பேரஸ்டோ 532 ரன்கள் எடுத்தது முதல் இடத்திலும், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் எடுத்தது இரண்டாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 23 வயதில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவராக சச்சின் சாதனையை ரவீந்தரா முறியடித்திருக்கிறார். சச்சின் 96 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 523 ரன்கள் அடித்திருந்தார். ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு மெகா சாதனைகளை இன்று 23 வயதான இளம் ரச்சின் ரவீந்திரா முறியடித்திருக்கிறார்!