இந்திய அணியே ரொம்ப பலவீனமாக இருக்கு.. வென்றதுக்கு காரணமே 3 பேர் தான் – சபா கரீம் கருத்து

0
1081

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் நமது வீரர்கள் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித் சர்மா அக்சர்பட்டேல், அஸ்வின் தவிர மற்ற வீரர்ள் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் நமது அணியின் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை எனக் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பேட்டிங் இருக்கு மிகவும் ஆபத்தாக இல்லை என்று குறிப்பிட்ட அவர் இந்த சூழ்நிலைகளில் ரன் அடிக்கலாம் என்பதை நமது நடுவரிசை வீரர்கள் நிரூபித்து இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

வங்கதேச தொடரில் கூட நமது பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்காமல் சொதப்பினார்கள். அஸ்வின் தான் அப்போது அணியை காப்பாற்றினார் என்றும் சபா கரீம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நமது டாப் ஆர்டர் பேட்டிங் கவலை அளிக்கும் விதமாக இருப்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதனை சரி செய்ய முடியும் எனவும் சபாகரீம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே இதே கருத்தை வலியுறுத்தியுள்ள விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா இந்திய பேட்டிங் பலவீனமாக இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். ரோகித் சர்மாவை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ரன் சேர்க்க வேண்டும் என்றால் இந்தூர் மைதானத்திற்கு முன்பே வந்து பயிற்சியில் பேட்ஸ்மேன்கள் ஈடுபட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாக இருப்பது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர் ஆல்ரவுண்டர்களால் ரன்கள் அடிக்கும் போது உங்களால் ஏன் முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராஜ்குமார் ஷர்மா எஞ்சி உள்ள டெஸ்டில் வீரர்கள் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்பது குறித்து உணர்ந்து இருப்பார்கள் என தான் நம்புவதாக கூறியுள்ளார். இந்தூர் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்துதான் விளையாடுவார்கள் என்பதால் அதற்கு ஏற்றார் போல் இந்திய அணி தங்களது பயிற்சியை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ராஜ்குமார் சர்மா வலியுறுத்தியுள்ளார்