SA20.. 200ரன் பார்ட்னர்ஷிப்.. அதிரடி சதம்.. சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!

0
477
JSK

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடர் போல பிரான்சிஸ் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெறும் ஆறு அணிகளையும், இந்திய ஐபிஎல் தொடர் அணிகளின் ஆறு உரிமையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பாப் டு பிளிசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரன் பொல்லார்டு தலைமையிலான கேப்டவுன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் தமது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.

கேப்டன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கம் தருவதற்கு வான்டர் டேசன் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி களம் இறங்கியது. இந்த ஜோடி இரக்கம் இல்லாமல் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அதிரடியாய் சிதறடித்தது.

இந்த ஜோடி முதல் நூறு ரண்களை தாண்டியதோடு நிற்காமல், முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய வான்டர் டேசன் 46 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, மொத்தம் 50 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த ஜோடியின் இன்னொரு பேட்ஸ்மேன் ரியான் ரிக்கெல்டன் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் கேப்டவுன் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் பர்கர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 6, ரீசா ஹென்றிக்ஸ் 0, ரோனா ஹெர்மான் 9, மொயின் அலி 11, டோனவன் பெரீரா 14, லியூஸ் டு பிளாய் 48, பர்கர் 9, ரொமாரியோ ஷெப்பர்ட் 34, ஜாகீர் கான் 0, இம்ரான் தாஹிர் 1* ரன்கள் எடுக்க, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் பந்து வீச்சில் ஜார்ஜ் லிமிடே மற்றும் ஒல்லி ஸ்டோன் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.