ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 2024.. வலிமையான உத்தேச பிளையிங் லெவன்.. சிஎஸ்கேவை மிஞ்சும் பலம்

0
2664

தென் ஆப்பிரிக்காவில் தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஜோபார்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைஸ் ஈஸ்டன் கேப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. கடந்த முறை ஜோபார்க் அணி இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை நழுவ விட்டது. இம்முறை அதனை சரி செய்யும் பொருட்டு சிறந்த பிளேயிங் லெவன் அணியைக் கொண்டுள்ளது. சென்னை அணியை மிஞ்சும் அளவு ஜோபர்க் அணி வலுவாக உள்ளது. அது குறித்துத் தற்போது காணலாம்.

தொடக்கம்: பாப் டு பிளஸிஸ் ரீசா ஹென்றிக்ஸ்

- Advertisement -

டு பிளஸிஸ் கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ஹென்றிக்சால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருப்பினும் கடந்த சில மாதங்களாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இம்முறை ஜோபர்க் அணிக்கு சிறப்பான பேட்டிங்கை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சிறப்பான ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் அணிக்கு நல்ல தொடக்கம் அமையும்.

மிடில் ஆர்டர்: மொயின் அலி, லியூஸ் டு ப்ளூய், டொனோவன் ஃபெரீரா ரொமாரியோ ஷெப்பர்ட், டேவிட் வைஸ்

மொயின் அலி நம்பர் 3 வரிசையில் களம் இறங்கி அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் சமீப காலங்களில் அவரது ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அவர் ஒரு மதிப்பு மிக்க வீரர். இம்முறை சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூஸ் டு ப்ளூய் மிடில் ஆர்டரில் களம் இறங்கி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியவர்.

- Advertisement -

டொனோவன் ஃபெரீரா பவர் ஹிட்டர் ஆன இவர் இறுதிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்க்க முடியும். ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் திறமை கொண்டவர். எனவே இந்த முறை அவரது அதிரடியை எதிர்பார்க்கலாம்.

ரொமாரியோ ஷெப்பர்ட் ஏலத்திற்கு முன்னர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு திரும்பவும் வாங்கப்பட்டார். இவர் உலகெங்கிலும் உள்ள அனைத்து டி20 லீக்குகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறந்த பார்மில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவரது வருகை ஜோபர்க் அணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும்.

ஜோபர்க் அணியின் வெயின் மேட்சன் தற்போது 40 வயதைக் கடந்துள்ள நிலையில் அணியின் தேவைகளுக்கு பொருந்தாமல் போகலாம். இதனால் டேவிட் வைஸ் மீது அணி நம்பிக்கை வைத்துக் களமிறக்கும் மற்றும் டேவிட் வைஸ் பவுலிங்கில் கூடுதல் பங்களிப்பை வழங்குவார்.

லோ ஆர்டர் : ஜெரால்ட் கோட்ஸி, லிசாட் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்

வேகப்பந்து வீச்சினைப் பொருத்தவரை கோட்ஸே அணிக்கு வலு சேர்க்கிறார். ஆனால் அவரது காயம் தற்போது அணிக்கு பிரச்சினையாகியுள்ளது. அவர் விரைவாகக் குணமடைய வேண்டும். அவருடன் பர்கர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் உள்ளதால் வேகப்பந்துவீச்சினைப் பொருத்தவரை அணி வலுவாக உள்ளது.

சுழற் பந்துவீச்சினைப் பொருத்தவரை அணிக்கு கைல் சிம்மன்ஸ் மற்றும் ஆரோன் பாங்கிசோ ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர அணியின் ஆஸ்தான சுழற் பந்துவீச்சாளரான இம்ரான் தாகிர் இருக்கிறார். 44 வயதான இவர் இன்னமும் உடற்பகுதியோடு இருக்கிறார். ஜாகீர் கானும் ஒரு பந்து வீச்சளராக அணியில் உள்ளார். இருப்பினும் அவரது பார்ம் சிறப்பாக இல்லாததால் இம்ரான் தாகிர்க்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படலாம்.