இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே! MI அணியை ஓட விட்ட சூப்பர் கிங்ஸ்

0
1604

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் முதல் இரண்டு இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. ஜோனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டன் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற எம்.ஐ கேப்டன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இதனை அடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டிப்ளசிஸ், ஹென்றிகிஸ் ஆகியோர் டக் அவுட்டாகி அணிக்கு அதிர்ச்சி தொடக்கத்தை அளித்தனர்.மகான்யா 4 ரன்களில் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய லிஸ் டுப்ளே மற்றும் மேத்தீவ் வெட் ஆகியோர் எம் ஐ கேப் டவுன் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். மேத்தீவ் வெட் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க சிறப்பாக விளையாடிய லிஸ் டுப்ளே 48 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார்.

இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்ஐ கேப்டவுன் அணி களம் இறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  வெண்டர் டுஷன் 14 ரன்களிலும் பேபி ஏபி டிவில்லியர்ஸ் என்று அழைக்கப்பட்ட டிவால்ட் பிராவீஸ் 26 பந்துகளில் 27 ரன்களும், டீம் டேவிட் 8 பந்துகளில் 17 ரன்களும் அடித்தனர்.

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்ப எம்ஐ கேப்டவுன் அணி 17.5 ஓவரில் 113 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ் அணி ஆறு வெற்றிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதன் மூலம் லீக் ஆரம்பத்தில் எம் ஐ கேப் டவுன் அணியிடம் தோற்றத்திற்கு சென்னை அணி பதிலடி கொடுத்திருக்கிறது. சூப்பர் கிங்ஸ் அணியில் சிம்மெண்ட்ஸ், ஜெரால்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் மகிஷ் திக்சனா இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -