தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக துவக்க ஆட்டக்கார ரியான் ரிக்கல்டன் சாதனை இரட்டை சதம் அடித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. முதலில் டி20 தொடரை இழந்து பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்று இரண்டாவது போட்டியை தற்போது எதிர்கொண்டு விளையாடிக் கொண்டு வருகிறது.
தென் ஆப்பிரிக்கா அபார பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 17, வியான் முல்டர் 5, ஸ்டப்ஸ் 0 என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற அந்த அணிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்து 325 பந்துகளில் 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டெம்பா பவுமா சதம் அடித்து 179 பந்துகளில் 106 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ரிக்கல்டன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
2025 சாதனை இரட்டை சதம்
மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டன் 266 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 2008ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக 238 பந்தில் இரட்டை சதம் அடித்தது இதுவரையில் அதிவேக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் இரட்டை சதமாக இருக்கிறது.
இதையும் படிங்க : எங்க வீரரை மிரட்டி இருக்காங்க.. ஐசிசி தண்டிக்கல.. இனி எங்க வழியே வேற – ஆஸி கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் பேச்சு
இந்த நிலையில் ரியால் ரிக்கல்ட்டன் 17 வருடங்களுக்குப் பிறகு கிரேம் ஸ்மித்துக்கு அடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அதிவேக இரட்டை சதத்தை அடித்திருக்கிறார். இந்த வருடத்தின் முதல் இரட்டை சதமும் இதுவே ஆகும். மேலும் தற்போது ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் தாண்டி தென் ஆப்பிரிக்க அணி விளையாடிக் கொண்டு வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சிலேயே பரிதாபமாக பின்னடைவை சந்தித்திருக்கிறது.






