எங்க வீரரை மிரட்டி இருக்காங்க.. ஐசிசி தண்டிக்கல.. இனி எங்க வழியே வேற – ஆஸி கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் பேச்சு

0
2248
McDonald

தங்கள் அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாசை களத்தில் இந்திய வீரர்கள் மிரட்டியதாகவும் அதற்காக ஐசிசி அவர்களுக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் பும்ரா நேர தாமதம் செய்த கவாஜாவை சீக்கிரம் விளையாடும் படி கூற, பந்துவீச்சாளர் முனையில் இருந்த சாம் கான்ஸ்டாஸ் தேவை இல்லாமல் பம்ப்ராவிடம் பேச, களத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டு நடுவர் தீர்த்து வைத்தார்.

- Advertisement -

இந்திய வீரர்கள் தந்த பதிலடி

இந்த விவகாரத்தில் பும்ரா முதலில் எதையும் ஆரம்பிக்கவில்லை. கவாஜா இன்னும் ஒரு கூடுதல் ஓவராக இந்திய அணி வீசாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்றே தாமதம் செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் பந்துவீச்சில் இருந்த பும்ரா சீக்கிரத்தில் தயாராகும் படி அவரிடம் வலியுறுத்தினார். இதற்கு தேவையில்லாமல் கான்ஸ்டாஸ் உள்ளே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஓவர் மற்றும் அன்றைய நாளின் கடைசி பந்தில் உஸ்மான் கவாஜாவை பும்ரா வெளியேற்றினார். இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது உம்ரா மற்றும் சில இந்திய வீரர்கள் கான்ஸ்டாஸ் நோக்கி நகர்ந்து பின்பு அப்படியே விலகி விட்டார்கள். வணக்கம் போல் அந்த விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடினார்கள். அதில் சற்று ஆக்ரோஷம் காணப்பட்டது அதற்கு காரணம் கான்ஸ்டாஸ் ஆகவே இருந்தார்.

- Advertisement -

இந்திய வீரர்களை தண்டித்திருக்க வேண்டும்

இதுகுறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் கூறும் பொழுது ” இந்திய வீரர்களுக்கு அபராதம் மிதிக்க வேண்டும் என்பது இந்த விவகாரத்தில் இந்த விளையாட்டின் சட்டம், ஒழுங்கு விதிமுறையில் இருக்கிறது. எதிரணியினர் பேட்டிங் முனையில் இல்லாத ஒருவரை சூழ்ந்து கொண்டு மிரட்டினார்கள். எங்களுடைய வீரர் இதைத்தொடர்ந்து சென்று அடுத்த நாள் விளையாடக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறாரா? என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : வெறும் 50 ஸ்ட்ரைக் ரேட்.. ரிஷப் பண்ட் செஞ்ச இந்த வேலையை நம்பவே முடியல – சச்சின் பாராட்டு

“இதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாததால் இந்திய வீரர்கள் செய்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று தெளிவாகிறது. போட்டி நடுவர் மிகவும் நேர்மையாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். இது விதிமுறைகளுக்கு சரியானது என்றால், நாங்களும் இதே முறையில் நடந்து கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -