இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் இளம் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடிய ரியான் பராக் வழிபட்டார். தற்போதைய பேட்டி ஒன்றில் அவர் நடப்பு டி20 உலகக் கோப்பையை பார்க்க விருப்பம் இல்லை என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் இருவருக்கும் அடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரியான் பராக் மூன்றாவது இடத்தை பிடித்தார். மொத்தம் 16 போட்டியில் விளையாடிய அவர் 573 ரன்கள் எடுத்தார். இது அவருடைய கனவு ஐபிஎல் சீசனாக அமைந்தது.
கடந்த வருடம் முதலில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அசாம் மாநில அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தியதோடு, சிறிய அணியான அந்த அணிக்கு மிக முக்கியமான பேட்ஸ்மேன் ஆக இருந்து, நிறைய ரன்கள் குவித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டு வந்தார். மேலும் பந்து வீச்சிலும் கணிசமாக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் குமார் சங்கக்கரா இவரை பேட்டிங்கில் நான்காவது இடத்திற்கு கொண்டு வந்தார். இது மிகப்பெரிய தாக்கத்தை அணிக்கு ஏற்படுத்தியதோடு இவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியில் இவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய அவர் “எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று என்னிடம் இப்பொழுது கேட்டால், என்னுடைய பதில் ஒரு பக்க சார்பாக அமையும். உண்மையில் நான் உலகக் கோப்பையை பார்க்கக்கூட விரும்பவில்லை. கடைசியில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பேன். நான் உலகக் கோப்பையில் விளையாடும் பொழுது அரை இறுதிக்கு வரும் அணிகள் எதுவாக இருக்கும் என்று யோசிப்பேன்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இந்த 2 பேர்தான் பிரச்சனை.. இதனால பெரிய கவலையை தராங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி
விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் அடித்தது எனக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும். நான் அவரை முதன் முதலாக ஆர்சிபி அணிக்கு எதிரான ஒரு ஐந்து ஓவர் போட்டியில் பார்த்தேன். அப்பொழுது அவர் களத்திற்குள் வரும் பொழுது அவர் எப்படியான ஆராவை கொண்டு வருகிறார் என்று நான் தெரிந்து கொண்டேன்” என்று கூறி இருக்கிறார்.