இந்திய அணியில் இந்த 2 பேர்தான் பிரச்சனை.. இதனால பெரிய கவலையை தராங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
33
Aakash

நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணி சமநிலை கொண்ட அணியாகவே காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு இந்த அணி சரியாக செயல்படும் என்று நம்பலாம். இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இந்திய அணியில் இரண்டு வீரர்கள் செயல்படும் விதம் மிகவும் கவலை அளிப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

நேற்று இந்தியா அணி பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே இருவருமே சுமாராக விளையாடினார்கள். மேலும் பந்தை அடித்து விளையாட ரவீந்திர ஜடேஜா கஷ்டப்பட்டார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் மைதானத்தின் கண்டிஷன் பந்தை ஸ்விங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தது. மேலும் ஆடுகளத்தில் கொஞ்சம் ஸ்பான்ச் பவுன்ஸ் இருந்தது. இதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் என இருவருமே வசதியாக காணப்பட்டார்கள்.

மேலும் ரவீந்திர ஜடேஜாவும் பார்மில் இருக்க வேண்டும். அவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்வதால் பேட்டிங் செய்ய நிறைய வாய்ப்பு கிடைக்காது. எனவே விளையாடி அவரால் பார்முக்கு வர முடியாது. அவரால் பினிஷராக இருக்க முடியுமா? என்கின்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்பொழுது சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் கவலை தருகிறது.

இதையும் படிங்க : கேப்டனா ஆனதும் ஒரு கட்டளை போட்டேன்.. இப்ப அவங்க திரும்பி பார்த்து இருக்காங்க – ரோமன் பவல் பேட்டி

- Advertisement -

அதே சமயத்தில் நேற்று ஸ்பிங் நிறைய இருந்தது. இதன் காரணமாக நீங்கள் சிறப்பாக பந்து வீச முடியும். எனவே இதை வைத்து இவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்கின்ற முடிவுக்கு வர முடியாது” என்று கூறி இருக்கிறார்.