சிஎஸ்கே அணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் விளையாட விரும்பினார் என தற்போதைய கேப்டன் ருதுராஜ் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு விளையாட இருக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே புதிய பிளான்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் தொடரில் அதிரடியாக மாறியது. இங்கிருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அணிகள் முதல் பந்தில் இருந்து தாக்குதல் ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தன. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஐபிஎல் தொடர் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இந்த மாற்றத்தை உணரவில்லை. இதன் காரணமாக வழக்கமான பாணியில் அணியை எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான தோல்வியை சந்தித்தார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கு முழுக்க முழுக்க அதிரடியான ஒரு அணியை கொண்டு வந்து புதிய திட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
காயம் பட்ட சிங்கம்
இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “கடந்த ஆண்டு நாங்கள் மிக மோசமான தோல்வியை அடைந்து. உண்மையில் இப்பொழுது நாங்கள் காயம்பட்ட ஒரு சிங்கமாக இருக்கிறோம். காயம் பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று கர்ஜனையை விட அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடுவோம்”
இதையும் படிங்க : நீங்க வேற மாதிரி ஒரு ரோகித்தை பார்க்க போறீங்க.. இப்படித்தான் ஆடப் போறாரு – ஸ்டெய்ன் நம்பிக்கை
“மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் என்னை சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ஆக்குகிறார்களா என்று விசாரித்தார். அப்படி நீ கேப்டனாக வந்தால் உன்னுடைய தலைமையில் நான் சந்தோசமாக சிஎஸ்கே அணியில் அடுத்த சில வருடங்கள் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.






