நீங்க வேற மாதிரி ஒரு ரோகித்தை பார்க்க போறீங்க.. இப்படித்தான் ஆடப் போறாரு – ஸ்டெய்ன் நம்பிக்கை

0
3
Rohit

இந்த முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா புதிய அப்ரோச் உடன் விளையாடுவார் என டேல் ஸ்டெய்ன் கூறி இருக்கிறார்.

தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், அந்த அணியால் போட்டிகளில் அதிகப்படியாக வெற்றி பெற முடிவதில்லை. போட்டியை தங்கள் பக்கம் முடித்துக் கொடுக்கும் பினிஷர்கள் இல்லாததால் தடுமாறுகிறார்கள்.

- Advertisement -

ரோகித் புது அவதாரம்

ரோகித் சர்மா நீண்ட வருடங்களுக்குப் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் தாண்டி எடுத்தார். மேலும் அவர் ஒரு சதமும் அடித்திருந்தார். கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னால் அவருடைய ஐபிஎல் ஆட்டம் மாறி இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய ஒருநாள் அணியில் நீடிப்பதற்காக இந்த வருடம் அவர் உடல் எடையை குறைத்து மிகவும் பிட்டாக காணப்படுகிறார். எனவே அவர் இன்னும் உற்சாகத்துடன் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இப்படித்தான் ஆடப்போகிறார்

இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் பேசும் பொழுது “ரோகித் சர்மா முழு வீச்சில் களம் இறங்குவார். அவர் ஆக்ரோஷத்துடனும் அதேசமயத்தில் கவனத்துடனும் வெளியில் வருவார். அது பொறுப்பற்ற முறையில் வெறும் அதிரடியாக ஆடுவதாக இருக்காது. அது களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடும் பண்பட்டதாக இருக்கும். இந்த சீசனில் அவரின் சிறந்த ஆட்டத்தை நாம் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்”

இதையும் படிங்க : ஆர்சிபி இன்னைக்கு கட்டாயம் தோற்கும்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான்.. ஹைதராபாத் கலக்கும் – அஸ்வின் கணிப்பு

“இதை தற்போது அவர் உடல் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் கிரிக்கெட் எப்பொழுதும் ஒரு பரபரப்பான சூழ்நிலையிலேயே இருக்கிறது. ஆனால் இப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு வெற்றி கலாச்சாரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. உலகம் இதை கவனிக்கிறது. மேலும் இந்தியா மற்ற அனைவரையும் விட இரண்டு படிகள் முன்னே உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -