முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய இளம் அணி தற்போது ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இளம் இந்திய வீரரான ருதுராஜ் கெயிக்வாட் முதல் 10 இடங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்களது இடத்தை நிரப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஐபிஎல்லின் நட்சத்திர ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 46 பந்துகளில் தனது முதல் சதத்தினை நிறைவு செய்து பிசிசிஐயை தன் மீது கவனத்தை திருப்பும்படி செய்து இருக்கிறார்.
ஏற்கனவே டி20-ல் துவக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கும் நிலையில், மற்றொரு புதிய போட்டியாக அபிஷேக் ஷர்மாவும் தற்போது களமிறங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளாக மூன்றாவது வரிசையில் களம் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும் ருதுராஜ் கெய்குவாட் மூன்றாவது வரிசையில் களமிறங்கி முதல் போட்டியில் 7 ரன்களில் வெளியேறினாலும், இரண்டாவது போட்டியில் 77 ரன்கள் குவித்து குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தார்.
மூன்றாவது வரிசையில் களமிறங்கி சிறப்பான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டாப் 10 டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ருதுராஜ் 13 இடங்கள் முன்னேறி தற்போது ஏழாவது இடத்தில் இருக்கிறார். இது டி20 கிரிக்கெட்டில் இவரது சிறந்த நிலையாகும். இதற்கு முன்னர் இருபதாவது இடத்தில் இருந்த இவர் தற்போது ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் 13 இடங்கள் முன்னேறி உள்ளார்.
இந்த டி20 தொடரில் அறிமுகமான அபிஷேக் ஷர்மா தற்போது 75 ஆவது பட்டியலில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் இருக்கிறார். 821 புள்ளிகளுடன் சூரியகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், ருத்ராஜ் 662 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய பவுலிங் கோச்.. தமிழக வீரருக்கு குறி.. கம்பீர் பேச்சை கேட்காத பிசிசிஐ – வெளியான புதிய தகவல்கள்
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை
1.டிராவிஸ் ஹெட் – 844
2.சூர்யகுமார் யாதவ் – 821
3.பில் சால்ட்- 797
4.பாபர் ஆசம் – 755
5.முஹம்மது ரிஸ்வான் – 746
6.ஜோஸ் பட்லர் – 716
7.ருதுராஜ் கெய்க்வாட் – 662
8.பிராண்டன் கிங் – 656
9.ஜான்சன் சார்லஸ் – 655
10.ஐடன் மார்க்ராம் – 646