இந்திய பவுலிங் கோச்.. தமிழக வீரருக்கு குறி.. கம்பீர் பேச்சை கேட்காத பிசிசிஐ – வெளியான புதிய தகவல்கள்

0
766
Gambhir

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் மற்றும் ராகுல் டிராவிட் பயிற்சியில் டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தற்பொழுது கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக வந்திருக்கிறார். மேலும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் ஒருவரை குறி வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவித்தது. புதிதாக வரும் தலைமை பயிற்சியாளர்கள் தங்களுக்கான பயிற்சியாளர் குழுவை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் கவுதம் கம்பீர் தன்னுடைய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய மற்றும் கர்நாடக வீரர் வினய் குமாரை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் பில்டிங் பயிற்சியாளர் டி திலீப் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பீர் உடைய விருப்பத்திற்கு பிசிசிஐ அபிஷேக் நாயருக்கு மட்டுமே சம்மதித்திருக்கிறது என்றும், பிசிசிஐ கட்டுப்பாடு முழுமையாக ஒரு பயிற்சியாளரிடம் செல்வதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியமே தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

தற்போது புதிய பந்துவீச்சாளருக்கான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேடலில் இந்திய முன்னாள் வீரர் மற்றும் மும்பை இந்தியன் அணியின் இயக்குனராக இருந்த ஜாகிர் கான் மற்றும் இந்திய முன்னாள் வீரர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரது பெயர்கள் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி கிடையாது.. இந்த இந்தியர்தான் நான் சந்தித்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன் – ஆண்டர்சன் பேட்டி

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம், கம்பீருக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே கொடுக்க விரும்புகிறது என்றும், ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜி இருவரில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக வருவார்கள் என்றும் பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -