மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கிலும் தொடரும் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி.. 22 பந்தில் அரைசதம்.. கேப்டன் பொறுப்பிலும் அசத்தல்!

0
3458

மகாராஷ்டிரா பிரீமியர் லீகில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட்.

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணியில் கொண்ட இந்த தொடரில் புனேரி பாப்பா அணிக்காக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், கேப்டனாகவும் இருகிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் 590 ரன்கள் குவித்தார். பைனலிலும் வெற்றிக்கு ஓபனிங்கில் முக்கிய பங்காற்றினார். மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்த ருத்துராஜ் கெய்க்வாட், தன்னுடைய ஃபார்மை மகாராஷ்டிரா ப்ரீமியர் லீகிலும் தொடர்ந்து உள்ளார்.

இந்த சீசனின் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான புனேரி பாப்பா அணி கேதர் ஜாதவ் தலைமையிலான கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த கோலாப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் உள்ள பேருக்கு 144 ரன்கள் அடித்தனர்.

இந்த இலக்கை சரி செய்த புனேரி அணிக்கு ருத்துராஜ் மற்றும் பவன் ஷா இருவரும் அபார துவக்கம் கொடுத்து, முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். 22 பந்துகளில் அரைசதம் அடித்தார் ருத்துராஜ். 27 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

145 ரன்கள் இலக்கை 14.1 ஓவரில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது ருத்துராஜ் தலைமையிலான புனேரி பாப்பா. பேட்டிங்கில் கலக்கிய ருத்துராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பு இரண்டிலும் ருத்துராஜ் அசத்தி வருகிறார். மேலும் மகாராஷ்டிரா அணியை ரஞ்சிக் கோப்பை, சயீத் முஸ்தாக் அலி டிராபி இரு பெரிய தொடர்களிலும் கடந்த சீசனில் கேப்டனாக வழிநடத்தினார். அப்போது பேட்டிங்கில் இவர் தான் அதிக ரன் குவித்தவராகவும் இருந்தார்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது வரை அணியில் எவரும் இல்லை என்கிற கருத்துக்களும் நிலவி வருகிறது. கேப்டன் பொறுப்பிலும் பேட்டிங்கிலும் தொடர்ந்து கலக்கி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கும் அநேக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.