இந்திய கிரிக்கெட்

2023 WC செமி பைனல் பிறகு.. ருதுராஜ் தரமான சம்பவம்.. விராட்டை நிற்க வைத்து சதம்.. மாஸ் பேட்டிங்

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டி இன்று சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஏமாற்றிய தொடக்க ஜோடி

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 8 பந்துகளில் 14 ரன்கள், ஜெய்ஸ்வால் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆரம்பத்தில் ஆடுகளம் பந்து வீசிக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அனுபவ வீரர் விராட் கோலி உடன் இளம் வீரர் ருதுராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு பக்கம் அதிரடியாகவும் அதே நேரத்தில் புத்திசாலித்தனமாகவும் விளையாடி ரன் ரேட்டை கீழே விழ விடாமல் தொடர்ந்து எடுத்துச் சென்றார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறை

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து அசத்தினார். மொத்தமாக 77 பந்துகளை சந்தித்த ருதுராஜ் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் தனது முதல் சதத்தை அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வாய்ப்பு பெற்ற அவர் தனது வாய்ப்பை நியாயப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தார். இறுதியாக 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : 2 பெரிய தப்பு.. ஜெயஸ்வால் உங்களுக்கு என்ன ஆச்சு.. நீங்களே இந்த மாதிரி பண்ணலாமா? – இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்திருந்தார். அதற்கு பிறகு தற்பொழுது இந்திய ஒரு நாள் அணியில் நான்காவது இடத்தில் வந்து ருதுராஜ் சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts