இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் கிடைத்த சிறப்பான வாய்ப்பை தவறவிட்டு இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறார்.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியிலும் தாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
கேம் அவர்னஸ் பிரச்சனை
தற்போது இந்திய இளம் வீரர்களுக்கு கேம் அவார்னஸ் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. போட்டி எந்த நிலையில் இருக்கிறது? அந்த நேரத்தில் எப்படியான ஷாட் செலக்சன் செய்ய வேண்டும் என்பதில் பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. இது மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சிறப்பாக ஆரம்பித்தார். இதற்கு அடுத்து ஆடுகளம் தொடர்ந்து வந்து வீச்சுக்கு சாதகமான நிலையில் காணப்பட்டது. ஆனாலும் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சரியாக செயல்படாததால் இந்திய அணிக்கு ரன்கள் வந்து கொண்டிருந்தது. எனவே பவர் பிளே தாண்டியதும் இந்திய அணி பொறுமையாக விளையாட ரன்கள் கிடைத்தது.
ஜெய்ஸ்வால் செய்த தவறு
இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மார்க்கோ யான்சன் வந்தார். இந்திய அணி அப்பொழுது 60 ரன்கள் தாண்டி இருந்தது. காலத்தில் அனுபவ வீரர் விராட் கோலி இருந்தார். இந்த நிலையில் அந்த ஒரு ஓவரை தாண்டி, பீல்டர்கள் வெளியே சென்ற பிறகு இன்னிங்ஸை பில்டப் செய்ய வேண்டிய இடத்தில் ஜெய் ஸ்வால் இருந்தார். அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர் களத்தில் இருக்க வேண்டிய தேவை இருந்தது.
இதையும் படிங்க : தொடர்ந்து 20 முறை.. பவுமா கொண்டு வந்த புதிய திட்டம்.. இந்திய அணிக்கு இரட்டை தலைவலி – 2வது போட்டியை வெல்லுமா?
இந்த நிலையில் ஃபுல் ஷாட் அடிப்பதற்கு இல்லாத பந்தை அடித்து ஜெய்ஸ்வால் மோசமான முறையில் ஆட்டம் இழந்தார். அந்த ஓவரில் பெரிய ரன்களுக்கு செல்ல வேண்டிய நெருக்கடி எதுவுமே இல்லை. மேலும் கேசவ் மகாராஜ் ஒன்பதாவது ஓரை வீச வந்த பொழுது, அந்த ஓவரை டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல அதிரடியாக அடித்த நொறுக்க முயற்சி செய்தார். ஆனால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. ஆடுகளம் கொஞ்சம் சிரமமாக இருப்பதை புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையால் தொடர்ந்து ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறார்.






