வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து தன்வீர் அகமது பேசியிருக்கிறார். அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் அந்த இன்னிங்ஸின் மகத்துவம் குறித்து அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.
சிங்கிள்கள் எடுக்காமல் நின்ற இடத்திலிருந்தே பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிய இளம் வீரரின் ஆற்றலை அவர் பாராட்டியுள்ளார். எதிர்காலத்திலும் இதைவிடப் பெரிய இன்னிங்ஸை யாராலும் ஆட முடியாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து தன்வீர் அகமது பேசும்போது, “நான் உங்கள் அனைவரிடமும் பேசுகையில் சத்தியமாக எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. என்ன மாதிரி சிக்ஸர்கள் அடித்தார். அந்தப் பையன் சிங்கிள்கள் எடுக்கவில்லை. நின்ற இடத்திலிருந்தே சிக்ஸர்கள் அடித்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து தன்வீர் அகமது பேசும்போது, “இப்போது யோசித்துப் பாருங்கள், அவன் கைகளில், அவன் ஃபோர்-ஆர்ம்ஸில், அவன் கால்களில், அவன் இடுப்பில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்று. நீங்கள் சாதாரணமாக ஆடும்போது அந்த நேரத்தில் அடிக்க முடியாது, அவன் நின்றபடியே அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான். அதாவது, இது என்ன மாதிரியான பேட்டிங்? என்னால் இப்படியொரு பேட்டிங்கைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக தன்வீர் அகமது பேசும்போது, “சத்தியமாக எத்தனை மில்லியன் முறை என்று எனக்குத் தெரியவில்லை, உனக்கு மில்லியன் முறை சல்யூட் அடிக்கிறேன். நான் இன்று சொல்கிறேன், சத்தியமாக, இனி வரவிருக்கும் அல்லது கடந்து போன அல்லது வரப்போகும் எல்லா கிரிக்கெட்டிலும், எதுவாக இருந்தாலும் நண்பா, இதைவிடப் பெரிய இன்னிங்ஸை யாராலும் ஆட முடியும் என்று நான் நினைக்கவில்லை. எதிர்காலத்தில் கிரிக்கெட் எவ்வளவு காலம் தொடர்ந்தாலும், இந்த இன்னிங்ஸை விடப் பெரிய இன்னிங்ஸை யாரும் ஆட முடியாது” என்று ஆரம்பித்து தன்வீர் அகமது கூறி இருக்கிறார்..