இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
இந்த சூழ்நிலையில் போட்டியில் பங்கு பெறுகிற நட்சத்திர வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
புகழ்பெற்ற டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி இந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் நடைபெற உள்ளது. கடந்த சீசனில் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் தென் மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சீசனில் நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ளது. இதில் நாக் அவுட் போட்டிகள் கிடையாது. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பெறுகிற அணியை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
இதில் மொத்தமாக இந்தியா ஏ, பி,சி, டி என நான்கு அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா ஏ அணிக்கு இந்திய சர்வதேச அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மான் கில் அணியை வழிநடத்த உள்ளார். இந்தியா பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக தலைமை வகிக்கிறார். இந்தியா சி அணிக்கு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழும் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்தியா டி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் வழி நடத்துகிறார். இந்த சீசனில் கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஷுப்மான் கில், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ், திலக் வர்மா, சிவம் தூபே என பல பெரிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் இந்திய சர்வதேச அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற பெரிய வீரர்கள் இடம்பெறவில்லை. வங்கதேச அணிக்கான டெஸ்ட் தொடர் மிக விரைவில் நடைபெற உள்ளதால் காயம் உள்ளிட்ட அசம்பாவித காரணங்கள் எதுவும் நிகழாமல் இருக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்தத் தொடரில் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். ஆனால் அவரது விலகளுக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனையை பிசிசிஐ விதுத்துள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவுல நாங்க தோற்கும் போது.. சூழ்நிலை இப்படித்தான் இருந்துச்சு.. ஆனா அதுக்கப்புறம் எங்க ஆட்டம் வேற – ஒல்லி போப் பேட்டி
எனவே இந்த போட்டிகள் அனைத்தும் வருகிற வியாழக்கிழமை முதல் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக லைஃவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இணையதளத்தில் ஜியோ ஆப்பிலும் இந்த போட்டிகளை கண்டுகளிக்கலாம்.