“சர்வதேச கிரிக்கெட்ல ருதுராஜ் நிச்சயம் கலக்குவார்; எனக்கு அதுல சந்தேகம் இல்லை” – சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்சி நம்பிக்கை

0
285
Hussey

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பில் மிகவும் ஆச்சரியமானதாக அமைந்தது டெஸ்ட் இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெற்றது!

அறிவிக்கப்பட்ட அணியில் ஏற்கனவே மூன்று துவக்க ஆட்டக்காரர்கள் இருந்ததும், மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் குவித்த சப்ராஸ் கானுக்கு பதிலாக ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பல கேள்விகளை உண்டாக்கியது!

- Advertisement -

இதுவரையில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ருதுராஜுக்கு அதிலேயே பெரிய வாய்ப்புகள் தரப்படவில்லை. இந்த நிலையில் இந்த முறை டெஸ்ட் அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய சர்வதேச எதிர்காலம் இந்திய வெள்ளைப் பந்து அணியில் தான் என்று நினைத்திருந்த நேரத்தில் இப்படியான அறிவிப்பு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்கர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வெங்சர்க்கர் கூறும் பொழுது “ருதுராஜ் நிச்சயமாகச் சிறப்பு திறமைக்கொண்ட வீரர். ஆனால் அது அவர் விளையாடும் போது மட்டுமே தெரியும். இங்கு அவர் எந்த வடிவத்தில் விளையாடுகிறார் என்பது பிரச்சனை கிடையாது. சிறந்த வீரர்கள் விளையாடும் வடிவத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

- Advertisement -

நாம் காத்திருக்க வேண்டியது எல்லாம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்பதற்குதான். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணி வரிசை எனக்குப் புரியவில்லை. நிறைய பேர் போட்டியில் இருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்!

மைக் ஹஸ்சி கூறும்பொழுது “ருதுராஜ் சர்வதேச அளவில் விளையாட முடியும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கான திறமையைக் கொண்டிருக்கிறார். அவர் அங்கு பெரிய ரன்கள் எடுப்பதை பார்க்க நான் விரும்புகிறேன்.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வார். ஆனால் அவர் சர்வதேச மட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் சாதிப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்!