ரவிச்சந்திரன் அஸ்வின் தனக்கு கொடுத்ததை தனக்கே உரிய ஸ்டைலில் திரும்ப கொடுத்த ருத்ராஜ் கெய்க்வாட்

0
267
Ravichandran Ashwin and Ruthuraj Gaikwad

முதல் குவாலிபயர் ஆட்டத்தில் நேற்று சென்னை அணி டெல்லி கேப்பிடல் சேனையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை சென்னை அணி தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 172 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய விளையாடிய சென்னை அணி ஆரம்பத்தில் டு பிளசிஸ் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இருப்பினும் அதன் பின்னர் வந்து களமிறங்கிய உத்தப்பா, ருத்துராஜ் உடன் இணைந்து தனது அதிரடியை காண்பித்தார். 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ராபின் உத்தப்பா வரவழைத்தார்.

- Advertisement -

அவருடன் இணைந்து விளையாடிய ருத்துராஜம் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 70 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். பின்னர் இறுதியில் வந்த மகேந்திர சிங் தோனி 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து சென்னை அணியை இறுதி ஓவரில் வெற்றி பெறச் செய்தார்.

9வது ஓவரில் நடந்த அந்த சம்பவம்

சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஒன்பதாவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அவரது பந்தை எதிர்கொள்ள ருத்துராஜ் தயாராக இருந்த நிலையில், திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வீசாமல் பேட்டிங் செய்ய தயாராக இருந்த ருத்துராஜை சில நொடிகள் காக்க வைத்தார். பின்னர் மீண்டும் அந்த பந்தை ரவிச்சந்திரன் அஷ்வின் ஓடிவந்து வீச முயலும் பொழுது, இந்த முறை ருத்துராஜ் திடீரென விலகிச் சென்று ரவிச்சந்திரன் அஸ்வினை பந்து வீசி விடாமல் செய்தார்.

இவர்கள் இருவரும் மாறி மாறி இப்படி நடந்துகொண்டது ரசிகர்கள் அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. ரவிசந்திரன் அஸ்வின் எப்பொழுதும் இது மாதிரியான விஷயங்களை செய்வதில் கெட்டிக்காரர். திடீரென ஓடிவந்து பந்து வீசுவதை பாதியில் நிறுத்தி, எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்வதில் வல்லவர். நேற்றும் அப்படி ஏதோ ஒரு சிந்தனையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அப்படி நடந்து கொண்டார். அவர் நடந்து கொண்ட விதத்திற்கு, ருத்துராஜ் செய்த அந்த செயல் பார்ப்பதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.

- Advertisement -

இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்றைய போட்டியில் இறுதி ஓவரில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி இதே துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கின்ற இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுவிட்டது. மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணி ஒன்பதாவது முறை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று தோல்வி அடைந்த காரணத்தினால் டெல்லி அணி வருகிற அக்டோபர் 13-ம் தேதி நடைபெற இருக்கின்றன இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.