பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆப் ரேஸில் இன்னும் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்… புள்ளி பட்டியலில் கீழே சென்ற மும்பை இந்தியன்ஸ்! – இனி என்ன நடந்தால் ராஜஸ்தான் அணி பிளே-ஆப் செல்லும்?

0
510

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் அரைசதம் அடித்துக்கொடுக்க, கீழ் வரிசையில் ஹெட்மயர் அதிரடியாக விளையாடியதால் பஞ்சாப் கிங்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியபோது, களமிறங்கிய சாம் கர்ரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

- Advertisement -

28 பந்துகளில் 44 ரன்கள் அடித்து ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து உள்ளே வந்த ஷாருக் கான் இன்னும் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சாம் கர்ரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடித்தார். ஷாருக் கான் 23 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு பஞ்சாப் அணி 187 ரன்கள் அடித்தது.

13 போட்டிகளில் 12 புள்ளிகளில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியை வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறலாம். புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேற வேண்டும் என்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இருந்தது.

இந்த போட்டியை அதிரடியாக விளையாடி நல்ல ரன்ரேட் பெறலாம் என்று களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. துரதிஷ்டவசமாக பட்லர் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். படிக்கல் 30 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

அடுத்து வந்த ஹெட்மயர் 28 குழந்தைகளில் 46 ரன்கள் ரியான் பராக் 12 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். கடைசியில் துருவ் ஜுரல் ஒரு சிக்சர் அடித்து போட்டியை ஃபினிஷ் செய்து கொடுத்தார். 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

உயிர்ப்புடன் இருக்கும் பிளே-ஆப் வாய்ப்பு

14 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னர் சென்று ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இருக்கிறது.

இனி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்றால், ஆர்சிபி அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவவேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவவேண்டும். இவை இரண்டும் நடக்கும் பட்சத்தில் நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆப் சென்றுவிடும். ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கனவு தகர்ந்து நேரடியாக வெளியேறிவிடும்.