221 ரன்.. ஆர்சிபிக்கு தோல்வி பயத்தை காட்டிய பாண்டியா திலக் வர்மா.. 12 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் போராடி தோல்வி.. ஐபிஎல் 2025

0
890

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆர்சிபி மும்பை மோதல்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். கடந்த போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடினார். மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா முதல் முறை இந்தப் போட்டியில் களம் இறங்கினார். இதன்படி பேட்டிங் களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் பில் சால்ட் தனது இரண்டாவது பந்தில் போல்ட் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னர் படிக்கலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்க ஆரம்பித்தார்.

இதில் குறிப்பாக பும்ராவின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து தனது ஆக்ரோஷத்தை காட்டிய விராட் கோலி இறுதியாக 42 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். படிக்கல் 37 ரன்னில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 5 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலமாக பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா திலக் வர்மா அதிரடி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அதிரடியாக போட்டியை துவங்கிய ரோஹித் சர்மா 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து யாஷ் தயால் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் ரியான் ரிக்கள்டன் 17 ரன்கள் குவித்து வெளியேற, வில்ஜாக்ஸ் மற்றும் சூரியகுமார் ஜோடி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிடில் வரிசையில் இந்த இருவரும் அதிக பந்துகளை வீணடித்தனர். 18 பந்துகளை எதிர்கொண்ட வில்ஜாக்ஸ் 22 ரன்கள், 26 பந்துகளை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் 28 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025ல் அதிக கிரிக்கெட் அறிவு இந்த அணிக்குதான்.. அந்த டீம் கோச் அபாரமான உணர்வு கொண்டவர் – சௌரவ் கங்குலி பாராட்டு

அதற்குப் பின்னர் களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் நிலைக்கு எடுத்துச் சென்ற இந்த ஜோடி 34 பந்துகளில் 89 ரன்கள் குவித்தது. இதில் 29 பந்துகளை எதிர்கொண்டத்தில வர்மா 56 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க இறுதியில் பெங்களூர் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.

- Advertisement -