17.3 ஓவரில் 175 ரன்.. டி20 வரலாற்றில் முதல் ஆசிய வீரர்.. விராட் கோலி படைத்த மெகா சாதனை.. 9 விக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி

0
1419

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 28 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இது சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

ராஜஸ்தான் பெங்களூர் மோதல்

ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்னிங்ஸ் தொடங்கினார்கள். இதில் சஞ்சு சாம்சன் தடுமாற ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 19 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் சஞ்சு 15 ரன்னில் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரியான் பராக் 22 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் என 30 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார்.

47 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் என 75 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் 23 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

- Advertisement -

விராட் கோலி சிறப்பான ஆட்டம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் தொடக்கம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அதிரடியாக ஆடி விளையாட ஆரம்பித்தார்கள். இதில் தொடக்கத்திலேயே விராட் கோலிக்கு கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ரியான் பராக் தவறவிட அதனை கச்சிதமாக விராட் கோலி பயன்படுத்திக் கொண்டார். இதற்கு இடையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க:66.. இந்திய வீரர்களின் பெருமை காத்த கோலி.. வார்னர் மெகா சாதனை தூள் தூளானது.. ஆர்சிபி அசத்தல்

இதற்குப் பிறகு களம் இறங்கிய தேவதத் படிக்கல் விராட் கோலி ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளை எதிர்கொண்ட படிக்கல் 40 ரன்கள், மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 45 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் இந்த ஜோடி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 175 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரை சதம் அடித்ததன் மூலமாக விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரை சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை படைத்தார்.

- Advertisement -