இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி அரை சதம் அடித்து டேவிட் கார்னரில் மெகா சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் ஜெய்ப்பூர் மான்சவாய் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடிக் கொண்டு வருகின்றன. இந்த போட்டியில் வெளிநாட்டு வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் படைத்திருந்த மெகா சாதனையை விராட் கோலி ஏறக்குறைய உடைத்து விட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் காட்டிய நிதானம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து ரியான் பராக் 22 பந்தில் 30 ரன்கள், ஜுரல் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் கொஞ்சம் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் நிதானத்தை நிறைய காட்டிவிட்டது. இதன் காரணமாக அவர்கள் கைவசம் விக்கெட் இருந்த போதும் கூட ஓவர்கள் இல்லாததால் 180 ரன்னை கூட நெருங்க முடியவில்லை. இந்த போட்டியில் அவர்களுக்கு இது பெரிய பிரச்சனையை உண்டாக்கி விட்டது.
விராட் கோலி மெகா சாதனை
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 65 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியானது. ஒரு மனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்தார். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் 66 ஆவது அரை சதமாக அமைந்தது.
மேலும் இந்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக அரை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னருடன் முதல் இடத்தை விராட் கோலி பிடித்தார். தற்போது இருவரும் தலா 66 அரை சதங்கள் ஐபிஎல் தொடரில் அடித்திருக்கிறார்கள். மேலும் அதிக இந்திய வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரரான டேவிட் வார்னர் இந்த சாதனையை வைத்திருந்தது பெரிய குறையாகவே இந்திய கிரிக்கெட்டில் இருந்தது. தற்போது இதை விராட் கோலி முடித்து வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : எங்ககிட்ட வந்து முடிஞ்சா 240 ரன் அடிங்க.. அதுக்கு ஸ்பெஷலா ஒன்னு வச்சிருக்கோம் – ரியான் பராக் பேட்டி
ஐபிஎல் தொடரில் அதிக அரை சதங்கள்:
66- விராட் கோலி*
66- டேவிட் வார்னர்
53- ஷிகர் தவான்
45- ரோஹித் சர்மா
43- ஏபி டிவில்லியர்ஸ்
43- கேஎல்.ராகுல்
40 – சுரேஷ் ரெய்னா






