202 ரன்.. எல்லீஸ் பெர்ரி ரிச்சா கோஷ் சூறாவளி ஆட்டம்.. மெகா இலக்கு சேஸ்.. கெத்து காட்டிய ஆர்சிபி.. மகளிர் ஐபிஎல் டி20

0
763

மகளிர் ஐபிஎல் தொடரின் மூன்றாவது கிரிக்கெட் சீசன் இன்று தொடங்கிய நிலையில் முதல் ஆட்டமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயின்ஸ் மகளிர் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18.3 ஓவர்களிலேயே மெகா இலக்கை அடைந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இன்று தொடங்கிய நிலையில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயின்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி குஜராத் அணியின் இன்னிங்சை தொடக்க வீராங்கனைகள் பெத் மூனே மற்றும் லாரா ஆவியோர் தொடங்கினார்கள். இதில் லாரா வால்வார்டிட் 6 ரன்னில் நடையை கட்டினார்.

இதில் மூனே அதிரடியாக விளையாடி 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளோடு 56 ரன்கள் குவித்தார். இடையில் ஹேமலதா 4 ரன்னில் வெளியேறினாலும், மிடில் வரிசை வீராங்கனை கார்டனர் 37 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸ் என 79 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பெங்களூரு அணி களம் இறங்கியது. அந்த அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை கேப்டன் மந்தனா 9 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை வியாட் ஹாஜ் 4 ரன்னில் வெளியேறினார். வெறும் 14 ரன்னில் 2 விக்கெட்டுகள் வெளியேற, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் எல்லீஸ் பெர்ரி மற்றும் ராகவி ஆகியோர் ஜோடி சேர்ந்த மூன்றாவது விக்கெட்டுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 86 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க:28 பந்துகள் மீதம்.. முன்னாள் இந்நாள் சிஎஸ்கே வீரர்கள் அபாரம்.. முத்தரப்பு ODI.. பாக் அணியை வீழ்த்தி நியூசி சாம்பியன்

இதில் ராகவி 25 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் களமிறங்கினார். அதற்குள் எல்லீஸ் பெர்ரி 57 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதே நேரத்தில் ரிச்சா கோஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 64 ரன்கள் குவித்து பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் பெங்களூர் அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -