ஐபிஎல் 2025 சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதன் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 10 ஐபிஎல் அணிகளும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்கும்.
இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் ஏலத்திற்கு செல்வதற்கு முன்பாக ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.
பெங்களூர் அணியின் அதிரடி மாற்றம்
இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது. விராட் கோலி முதல் கெயில் வரை நட்சத்திர வீரர்கள் விளையாடிய போதிலும் அந்த அணியால் இன்னும் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட பெங்களூர் அணி பந்து வீச்சு பலவீனத்தால் தொடக்கத்தில் அதிக போட்டிகளில் தோற்றது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி ராஜத் பட்டிதார், யஷ் தயால் என மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்திருக்கும் பெங்களூர் அணி தற்போது புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சால்வியை நியமித்திருக்கிறது. தற்போது உள்நாட்டு அணியான மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நிலையில் அதன் பணிகளை முடித்துவிட்டு விரைவில் பெங்களூர் அணியுடன் இணைய இருக்கிறார்.
புதிய பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்
கடந்த எட்டு மாதங்களில் ஓம்கார் சால்விக்கு சிறப்பான தருணங்களாக அமைந்திருக்கிறது. ரஞ்சிகோப்பை, இராணி கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்ததோடு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கும் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு முக்கிய பங்காற்றி இருக்கிறார். ஓம்கார் சால்வியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ரயில்வேக்காக ஒரே ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஆனால் ஒரு பயிற்சியாளராக மிகச் சிறந்த நற்பெயரை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் ஏலம் 2025.. உறுதியா சொல்றேன்.. ஸ்டார்க் ரெக்கார்ட இந்த இந்திய வீரர் முறியடிப்பார் – இர்பான் பதானின் வைரல் பதிவு
இந்திய கிரிக்கெட் வீரரான அஜின்கியா ரஹானே ரஞ்சி தொடரில் இவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது திறமையான பயிற்சியின் மூலமாக பெங்களூர் அணி அடுத்த வருடம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்குமா என்பதே பெங்களூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது.






