ஐபிஎல் ஏலம் 2025.. உறுதியா சொல்றேன்.. ஸ்டார்க் ரெக்கார்ட இந்த இந்திய வீரர் முறியடிப்பார் – இர்பான் பதானின் வைரல் பதிவு

0
171

18வது ஐபிஎல் சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான மெகா ஏலம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் பட்டியலை சில தினங்களுக்கு முன்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரரை குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் மெகா ஏலம்

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 17 சீசன்கள் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு 18வது சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருக்கின்றனர். ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அதன் தேவைக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்யும்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்தத் தொகை தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு செலவு செய்யப்பட்ட அதிகபட்ச தொகையாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதே ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக விளங்கி வரும் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

அதிக தொகைக்கு ஏலம் செல்ல வாய்ப்புள்ள இந்தியர்

சூழ்நிலை இப்படி இருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்திற்கு கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பெரிய பெயர்கள் வந்திருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு செல்வார் எனவும் மிட்சல் ஸ்டார்க்கின் ஏலத் தொகையை முறியடிப்பார் எனவும் சமூக வலைதளத்தில் தனது பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:இதுக்கு கூட விமர்சனமா.. ஒரு கிரிக்கெட்டரா நாங்க எவ்ளவோ தியாகம் செய்கிறோம் – ரோகித்துக்கு ஆதரவாக டிராவிஸ் ஹெட்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “மிட்சல் ஸ்டார்க்கின் ஏலம் முறியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ரிஷப் பண்ட் அதனை உடைக்க தயாராக இருக்கிறார். பெரிய தொகைக்கு ஏலம் செல்வார்” என்று தனது பதிவினை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது. ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடிய நிலையில் அவரை தக்க வைக்காத டெல்லி நிர்வாகம் வெளிவிட்டு இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி அவரை வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -