“ரோகித் அவுட்டானது கஷ்டமான பந்து கிடையாது.. இந்த தப்ப பண்ணினார்” – பார்த்திவ் படேல் விமர்சனம்

0
53
Rohit

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியை விட 143 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 255 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு மொத்த இலக்காக 399 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இன்று மூன்றாவது நாளில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் அவர் விளையாடிய விதத்தில் மிக மலிவான முறையில் தவறான ஷாட்கள் விளையாடி விக்கெட்டை பறி கொடுத்திருக்கிறார்.

கில் ஸ்ரேயாஸ் மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் மீது நிறைய பேட்டிங் சம்பந்தமான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இன்று கில் சதம் அடித்து அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் அவரது பேட்டிங் பற்றி பெரிய விமர்சனங்கள் வெளியில் இருந்து வரவில்லை. ஆனால் இன்று அவர் ஆட்டம் இழந்த முறை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தன்னுடைய விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பார்த்திவ் படேல் கூறும்பொழுது ” முதல் ஓவரில் அவர் ஜோ ரூட் பந்துவீச்சில் பேட்டிங் செய்த பொழுது, சுப்மன் கில் புட் வொர்க்கில் இருந்த முன் முயற்சி ரோகித் சர்மாவிடம் இல்லை. அவரது ஃபுட் வொர்க்கில் அந்த ஆற்றல் இல்லை.

அவர் ஆட்டம் இழந்த பந்தில் எளிமையாக ஒரு ரன் எடுத்து இருக்க முடியும். ஆனால் அவர் நேராக முன்னோக்கிப் போனார் அதனால் தான் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவரை ஏமாற்றினார். ரோகித் சர்மா ஆட்டம் இழந்த முறையில் ஒரு தொழில்நுட்ப தவறு இருக்கிறது.

அவர் அந்த பந்து விளையாடுவதற்கு முன் காலை அசைக்க மட்டுமே செய்தார். அதற்கு மேல் அவரிடம் புட் வொர்க் இல்லை. அப்படி கால்கள் முன்னோக்கி மேற்கொண்டு போயிருந்தால், அந்தப் பந்தை அவர் தடுத்திருக்க முடியும்.

இதையும் படிங்க : “என்ன வேணா சொல்லுங்க.. அடுத்த விராட் கோலி இந்த பையன்தான்” – அலைஸ்டர் குக் உறுதி

நிச்சயமாக பந்து நல்ல பந்துதான் மேலும் நல்ல இடத்திலும் தரையிறங்கி இருந்தது. ஆனால் கால்களை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் முன்னோக்கி சென்றிருந்தால், அந்தப் பந்தை விளையாடி இருக்கலாம். அது விளையாட முடியாத பந்து கிடையாது” என்று கூறியிருக்கிறார்.