“ரோகித்தின் இந்திய டீம்.. 1980 வெஸ்ட் இண்டீஸ் டீம்.. ஒன்னுமே பண்ண முடியாது!” – பாக் ரமீஸ் ராஜா வெளிப்படையான பாராட்டு!

0
3902
ICT

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைவதற்கு, உள்நாட்டு அணியான இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதும் முக்கியக் காரணமாக இருக்கிறது!

இந்திய அணி இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது. இதில் இந்திய அணி எந்த ஒரு அணியிடமும் பெரிய தடுமாற்றத்தை சந்திக்கவே இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.

- Advertisement -

மேலும் இந்திய அணி எதிரணிகளை ஆட்டத்திற்குள் வரவிடாமல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் முடக்கி ஒரு தலைப்பட்சமாக போட்டிகளை வென்று வருகிறது.

இந்திய அணிக்கு எந்த போட்டிகள் எல்லாம் அச்சுறுத்தலாக இருக்கும் என்று நம்பப்பட்டதோ, அந்தப் போட்டிகளில்தான் இந்திய அணியின் செயல்பாடு உச்சத்தில் இருந்தது. மேலும் எதிரணிகளின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. வெற்றி ஒருதலைப் பட்சமாக வந்தது.

இந்திய அணி தரமான பேட்ஸ்மேன்களைக் கொண்ட பேட்டிங் யூனிட், அதேபோல் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட பவுலிங் யூனிட்டையும் வைத்திருக்கிறார். இதன் காரணமாக இருவிதமான நெருக்கடிகளை எதிர் அணிக்கு உருவாக்கி வெல்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி எந்த அணியை அரையிறுதியில் எதிர்கொண்டாலும், லீக் சுற்றில் அந்த அணி இந்திய அணிக்கு எதிராக மோசமாக தோற்ற அணியாகத்தான் இருக்கும். இதுவே அந்த அணிகளுக்கு மனரீதியான பின்னடைவை உருவாக்குகிறது.

இந்திய அணி குறித்து பேசி உள்ள ரமீஸ் ராஜா கூறும் பொழுது ” வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்று கண்ணோட்டத்தில், மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களை இந்திய அணி வைத்திருக்கிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் மிகவும் உலகத்தரமான பேட்மேன்கள். மேலும் பந்துவீச்சிலும் இப்படியே இருக்கிறார்கள்.

நான் இவர்களை 1980 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒப்பிடுவேன். அந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் பெரிய பலத்தை கொண்டிருந்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சில். அவர்கள் போட்டிகளை ஒருதலை பட்சமாக வென்றார்கள். அந்த அணியோடு இந்திய அணி ஒப்பிடுவதற்கு மிகவும் சரியான அணி!” என்று கூறி இருக்கிறார்!