கண்ணீர் விட்ட ரோகித்துக்கு.. கபில்தேவ் உருக்கமான தைரிய பேச்சு!

0
22572
Rohit

நேற்று நடைபெற்ற 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் இல்லாமல், வீரர்களையும் பெரிய அளவில் புரட்டிப்போட்டு இருக்கிறது.

நேற்று இந்திய அணிக்கு எதிராக டாஸ் அமைந்த போதிலும் கூட, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்குத் தேவையான அதிர்ஷ்டம் இல்லை.

- Advertisement -

ரோகித் சர்மா இந்த தொடர் முழுக்க 126 ஸ்ட்ரைக் ரேட்டில் 500 ரன்கள் கடந்து அடித்திருக்கிறார். ஒரு உலகக் கோப்பை தொடரில் 500 ரன்கள் கடந்து இவ்வளவு ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிய வீரர்கள் யாருமே கிடையாது.

மேலும் கேப்டனாக ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை படைத்திருக்கிறார். இந்த உலகக் கோப்பை தொடர்பு முழுக்க அவருடைய ஆட்டம் அணிக்கு தனிப்பட்ட தாக்கத்தை தரக்கூடியதாக அமைந்தது.

நேற்றும் கூட ரோஹித் சர்மா பவர் பிளேவில் தந்த தொடக்கம் தான் அடுத்து விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் விளையாடுவதற்கு பெரிய அளவில் துணை செய்தது. இருவரும் பவுண்டரிகள் அடிக்காத போதிலும் கூட, ஆட்டம் ஓரளவுக்கு இந்திய அணியின் பக்கம் இருந்ததற்கு காரணம் இதுதான்.

- Advertisement -

ஒரு வீரராக ஒரு கேப்டனாக ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்த போதிலும் கூட, நேற்றைய இறுதிப்போட்டி இந்திய அணிக்கு சிறப்பாக அமையாத காரணத்தினால், அவருடைய மொத்த உழைப்பும் வீணாகிப் போனது.

நேற்று இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு மைதானத்தில் ரோகித் சர்மா கண்கலங்கிய சம்பவம் பார்ப்பவர்களை மிகவும் வேதனை அடைய செய்தது. இது குறித்து 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் நெகிழ்ச்சியான தைரிய பேச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கபில்தேவ் கூறும்பொழுது “ரோகித் சர்மா நீங்கள் செய்வதில் எப்பொழுதும் உன்னதமானவர். உங்களுக்காக நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன. இது கடினமானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் உங்கள் உற்சாகத்தை காத்துக் கொள்ளுங்கள். இந்தியா உங்கள் பின்னால் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!