“ரோகித் சூர்யா ஹர்திக் கிடையாது.. இந்த 29 வயது வீரர்தான் எங்க எக்ஸ்-பேக்டர்” – மும்பை கோச் பவுச்சர் பேச்சு!

0
780
Boucher

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு வீரர்களை எதிர்பார்த்த விலைக்கும் குறைவாக வாங்கியது. இதன் காரணமாக அவர்கள் அணி தற்பொழுது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

கடந்த இரண்டு சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா இல்லாததும், நல்ல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததும் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் இந்த முறை எக்கச்சக்கமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு வாய்ப்பு தருவது என்பதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நல்ல தலைவலியாக மாறி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசனில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் லெஜன்ட் வீரர் மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார். மேலும் இலங்கையின் ஜெயவர்த்தனே அவர்களுடைய எல்லா அணிகளுக்கும் ஆலோசகராக இருக்கிறார்.

இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் லஷீத் மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராக அணிக்குள் கொண்டுவரப்பட்டார். தற்பொழுது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய எல்லா முன்னணி வீரர்களையும் அணி நிர்வாகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் மலிங்காவை போலவே பந்து வீசக்கூடிய இலங்கையை சேர்ந்த நுவன் துஷாரா 4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கி ஆச்சரியப்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பதிரனாவை விட நுவன் துஷாரா மலிங்காவை மிகவும் ஜெராக்ஸ் எடுத்தவராக இருக்கிறார்.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறும்பொழுது “கடந்த இரண்டு மூன்று மாதங்களில் துசாரா எங்களுடைய கண்காணிப்பில் வந்தார். அவரை நான் அபுதாபி டி 10 லீக்கில் பார்த்தேன். அங்கு அவர் சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் பொல்லார்டு அங்கு இருந்தார். இதனால் அவர் அவரை எதிர்த்து விளையாடியும் இருந்தார்.

மேலும் ஜெயவர்த்தனே இந்த வீரர்களை சுற்றி இருந்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் மலிங்காவுக்கு இந்த வீரரை நன்றாகவே தெரியும். இது எல்லாம் சேர்ந்துதான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதற்கு காரணமானது.

இவரை வாங்குவது என்பது எங்களுக்கு எல்லோருக்கும் நல்ல தேர்வாக இருந்தது. அவர் எங்களுக்கு காம்பினேஷனில் சில மாறுபாடுகளை தருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் யாராவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால், அவர்கள் எக்ஸ் பேக்டர்களாக மாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த வகையில் அவர்தான் எங்கள் அணியின் எக்ஸ் பேக்டர்!” என்று கூறியிருக்கிறார்!