“ரோகித் சர்மாவின் பேராசைதான் காரணம்.. கட்டுப்பாடு இல்லாம போச்சு!” – கவாஸ்கர் வேதனையான பேச்சு!

0
4054
Rohit

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது, ஆனால் அதை ஒட்டிய விஷயங்களும் விவாதங்களும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மேலும் நிறைய சர்ச்சைகளும் இதைச்சுற்றி கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஸ் உலககோப்பையில் கால் வைத்து புகைப்படத்திற்கு போஸ் தந்தது பிரச்சனையானது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களே தவறானது கிடையாது என்று பல்வேறு வெளிநாட்டு கால்பந்து தொடர்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்கின்ற புகைப்படத்தை பதிவிட்டு உண்மையை கூறி விட்டார்கள்.

இன்னொரு பக்கத்தில் இந்தியாவில் சில மோசமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் சொந்த நாட்டு வீரர்களையும் கூட விட்டு விட்டு வைக்காதவர்களாக மோசமாக நடந்து கொள்ளவே செய்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தோல்வியின் போது, வீரர்களின் வீடு மீது கல்லெறிந்தது, உருவ பொம்மையை எரித்தது எல்லாம் நடந்தது.

- Advertisement -

தற்பொழுது இப்படியான மோசமான பழக்கம் இன்டர்நெட் காலத்தில் இன்னும் விரிவடைந்து, எதிரணி வீரர்களை மட்டும் அல்லாது அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் குடும்பத்தினருக்கு தவறான முறையில் செய்திகள் அனுப்புவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது மிக தவறான போக்கு என்று பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும் பொழுது ” சில ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் அப்யூஸ் செய்கிறார்கள் என்றால், அது ஒட்டுமொத்த இந்தியர்களும் அப்படியானவர்கள் என்பதற்கான பிரதிபலிப்பு கிடையாது.

இது வித்தியாசமாகவும் மோசமாகவும் சிந்திக்கும் ஒரு சிலரின் பிரதிபலிப்பு மட்டுமே. இது நடக்கக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. வெற்றி பெற்ற அணியை பாராட்ட வேண்டும். பெரும்பாலான இந்திய ரசிகர்கள் இதை செய்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியா அடுத்த கிரிக்கெட் தொடருக்கு சென்று விட்டது. அவர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தங்கள் பெஞ்ச் வலிமையை சோதிக்கிறார்கள். உலகக் கோப்பைக்குப் பிறகு அவர்கள் அடுத்து டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் திட்டங்களை ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வீரர்களுக்கும் மாற்று வீரர்களை தயார் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக காண முடியும்!” என்று கூறியிருக்கிறார்!