ஐபிஎல் 2025

15 வயசு ரோஹித்தை பார்த்த மாதிரி இருக்கு.. பேட்டிங்கை விட இதுக்காகவே ஆயுஸ் பெரிய ஆளா வருவார் – ரோஹித் சிறுவயது கோச்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகள் தோல்வி மற்றும் 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமான 17 வயது சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே குறித்து ரோகித் சர்மாவின் குழந்தை பருவ பயிற்சியாளர் ஆன தினேஷ் லாட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் 17 வயது வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில் ஏலத்தில் எடுத்த இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வரும் சூழ்நிலையில் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வாய்ப்பு பெற்றார்.

அறிமுகமான முதல் போட்டியிலேயே எந்தவித பயமும் இல்லாமல் 15 பந்துகளை எதிர் கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 32 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்றார். இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் குழந்தைப் பருவ பயிற்சியாளரான தினேஷ் லாட் சிஎஸ்கே இளம் வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித்தை பார்த்தது போல உள்ளது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சிஎஸ்கே இளம் வீரர் ரோஹித் சர்மாவை போலவே மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும் நேர்மறையாகவும் தெரிகிறார். இது மும்பை அணிக்கு எதிராக அவர் விளையாடிய போது அவரது ஆட்டம் நிச்சயமாக இதை பிரதிபலித்தது. ஆயுஷ் இப்போது விளையாடியதைப் போலவே ரோஹித் சர்மா தனது 15 வயதில் இதே முறையில் விளையாடினார். ஆயுஸ் 10 வயதாக இருந்தபோது முதன் முதலாக நாங்கள் அவரை பார்த்தோம்.

இதையும் படிங்க:ஹர்திக்கால் வந்த பிரச்சனை.. நெக்ராவின் 3 மாஸ் பிளான்கள்.. நிமிர்ந்த குஜராத் அணி.. தரமான சம்பவம்

அப்போது அவரது திறமை மற்றும் ஸ்ட்ரோக் அடிக்கும் விதத்தை நான் பார்த்தேன். மும்பையில் இருந்து வெகு தொலைவில் அவர் பயணம் செய்து வந்தாலும் சரியான நேரத்திற்கு வருவதை மிக கவனமாக கொண்டிருந்தார். இது அவரது விரைவான வளர்ச்சிக்கு மேலும் ஒரு காரணியாக அமையக்கூடும்” என்று அவர் கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் 6 போட்டிகள் விளையாட உள்ள நிலையில் 6 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு எதிர்கால சிஎஸ்கே வீரராக வளம் வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts