வார்னிங் கொடுத்த ரோகித் சர்மா.. மதிக்காத பிசிசிஐ.. சிக்கிக்கொண்ட இளம் வீரர்கள்.. என்ன நடக்கிறது?

0
3240
Rohit

இந்திய அணி அடுத்த வருடம் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக, கைவசம் மொத்தம் தற்பொழுது 6 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளான இன்று, போட்டிக்கு டாஸ் போடுவதற்கு முடியாத அளவுக்கு மழை பெய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பைக்கு செல்வதற்கு முன்னால் இளம் வீரர்களை கொண்ட இந்திய டி20 அணி, இவ்வளவு குறைவான சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவது சரியான ஒன்றாக இருக்காது.

அதே சமயத்தில் பிசிசிஐ மற்றும் அதன் செயலாளர் ஜெய் ஷா ஐபிஎல் தொடரை டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு நம்பியிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் எல்லா வீரர்களுக்கும் குறைந்தபட்சம் 14 போட்டிகள் விளையாட வாய்ப்பு இருப்பதே பயிற்சிக்கு போதும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடர் வேறு சர்வதேச டி20 தொடர் வேறு என்று தெளிவாக கூறியிருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லாத உள்நாட்டு பந்துவீச்சாளர்களும் வருவார்கள், ஆனால் சர்வதேச அணியில் பவுலிங் யூனிட்டில் எல்லோரும் அனுபவம் பெற்ற மற்றும் திறமையானவர்களாகவே இருப்பார்கள். எனவே ஐபிஎல் தொடரை வைத்து சர்வதேச டி20 தொடரை அணுக முடியாது என்று கூறியிருந்தார்.

அணியின் கேப்டனான ரோகித் சர்மாவே இந்த முடிவில் இருக்கும் பொழுது, பிசிசிஐ மற்றும் அதன் செயலாளர் ஜெய் ஷா நேர் எதிரான முடிவு எடுத்திருக்கிறார்கள். இது இளம் வீரர்கள் கொண்ட இந்திய டி20 அணிக்கு நிறைய சிக்கல்களை கொண்டு வரப் போகிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். ஆனால் வெஸ்ட் இண்டிஸ் மைதானங்களில் உள்ள ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய கடினமான மெதுவான ஆடுகளங்கள். மேலும் இந்திய இளம் வீரர்கள் நிறைய சர்வதேச டி20 அனுபவம் இல்லாதவர்கள். ரோகித் சர்மாவின் அனுபவ பேச்சை பிசிசிஐ மதிக்காமல் செயல்படுவதாகத்தான் தெரிகிறது!