ரோகித் சர்மா விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – சுனில் கவாஸ்கர் விமர்சனம்!

0
47
Asiacup2022

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்விக்கு, ஆசியா கோப்பையில் அதே மைதானத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு சிறிய ஆசுவாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அணி!

இந்தப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் ஒரு 15 ரன்களை கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டார்கள் அந்த சூழ்நிலையில். இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணி 147 என்ற ஒரு சவால் அளிக்கும் ஸ்கோருக்கு சென்றது. இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி மிக எளிமையாக இந்திய அணியால் வீழ்த்தப்பட்டு இருக்கும் என்பதே உண்மை. ஆனாலும் பந்து காற்றில் ஸ்ங்க் இல்லாத பொழுதும் புவனேஸ்வர் குமார் மிகச்சிறப்பான லைன் அண்ட் லென்த்தில் வீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இன்னொரு புறத்தில் ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான பவுன்சர்கள் மூலம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பாகிஸ்தான் அணிக்காக முதல்முறையாக டி20 போட்டியில் அறிமுகமான 19 வயதான நதிம் ஷா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி கூட்டணி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல முறையில் இந்திய அணியைச் செலுத்திக் கொண்டிருந்த இந்த ஜோடி தேவையல்லாத நேரத்தில் தேவையற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்தது. இவர்களின் இந்த பொறுப்பற்ற விளையாட்டின் காரணமாகவே இந்திய அணிக்கு நேற்றைய ஆட்டத்தின் உண்டான நெருக்கடி உருவானது. இல்லையென்றால் இந்திய அணி மிக எளிதாக வென்று இருக்கும்.

இதுகுறித்து தற்போது இந்திய முன்னாள் லேஜன்ட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் ” ராகுல் ஒரே ஒரு பந்து தான் விளையாடினார் இதை வைத்து எதுவும் கூற முடியாது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சிறிதுநேரம் விளையாடினார்கள் அவர்களுக்கு விளையாட நேரம் இருந்தது. முன்பு விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து அதைப் பற்றி மக்கள் பேசும் பொழுது நான் விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி வந்தேன். இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு பேச்சை தவறவிட்டது மற்றும் இன்சைடு எட்ஜ் என்று அதிர்ஷ்டம் இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் ரன்கள் எடுத்தார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை வைத்து அவர் 60,70 ரன்களை அடித்து இருக்க வேண்டும். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தவுடன் அவரும் ஆட்டம் இழந்தார். இருவரும் அவர்களாலே மறக்க முடியாத ஒரு தேவையற்ற ஷாட்டால் ஆட்டமிழந்தனர். அந்தக் கட்டத்தில் அந்த ஷாட்கள் தேவையற்றது. அப்பொழுது அவருக்கு 19, 20 ரன்கள் ஒன்றும் தேவைப்படவில்லை. அவர்கள் ஒரு எழுபது எண்பது ரன்களை அடித்த பிறகு பெரிய ஷாட்களுக்கு போயிருக்க வேண்டும். இந்த ஆட்டத்திலிருந்து அவர்கள் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் ” என்று கூறினார்!