“ரோகித் சர்மாவால் சூரிய குமாருக்கு பிரச்சனை” – கவுதம் கம்பீர் புதிய தகவல்!

0
882
Gambhir

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினாலும் அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது!

இந்தப் படுதோல்விக்கு இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறை தைரியமாக இல்லாததுதான் மிக முக்கியக் காரணம். மிகக் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மூத்த பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தைரியமான முறையில் ஆட்டத்தை அணுகவில்லை!

- Advertisement -

மாறிவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்திய அணி செயல்படவில்லை. எனவே இதற்கு தகுந்தார் போல் புதிய ஒரு இளம் இந்திய அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தற்பொழுது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் துணை கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் டி20 அணியில் ரோகித் சர்மா கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி மூவரும் இடம் பெறவில்லை. ஆனால் இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது விலக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை!

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்தச் சமயத்தில் கௌதம் கம்பீர் சில முக்கியக் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் ” ரோகித் சர்மா அணிக்கு வந்தவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூரியகுமார் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்களா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் தற்பொழுதைய இளம் அணியில் நமக்குரிய விருப்பங்கள் எத்தனை இருக்கின்றது என்றும் நாம் பார்க்க வேண்டும். நீங்கள் நல்ல ஒரு டி20 பிளேயராக இருந்தால் உங்களால் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு வர முடியும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கும் நுழைய முடியும் என்று சூரியகுமார் காட்டியிருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இப்போது அவர் தலைமைத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணிக்கு துணை கேப்டனாக இருப்பது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். எப்போதும் போல அவர் இதிலும் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். ரோஹித் சர்மா உள்ளே வந்தாலும் ஹர்திக் தான் கேப்டனாக சிறந்த முடிவு என்று தேர்வாளர்கள் கருதினாலும், சூரியகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும். அணிக்கான தலைமைகளில் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டிருப்பது நல்ல விஷயம் கிடையாது!” என்று ரோகித் சர்மாவால் சூரிய குமாரின் துணை கேப்டன் பதவிக்கு பிரச்சனை உள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்!