தோனியின் மெகா உலக ரெக்கார்டை உடைக்கும் ரோகித் சர்மா.. பிசிசிஐ கொடுத்த செம சான்ஸ்!

0
111
Dhoni

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஜூன் மாதம் நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு, எப்படியான இந்திய அணியை அமைப்பது என்கின்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இதற்கு முன்னோட்டமாக நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக துவங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவையும், மூன்றாம் இடத்து பேட்ஸ்மேனாக விராட் கோலியையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் மூலம் இந்த இரண்டு மூத்த வீரர்களும் வருகின்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாட இருப்பது தெளிவாகி இருக்கிறது. இதன் மூலம் இளம் வீரர்களைக் கொண்டு செய்யப்படும் சில பரிசோதனை முயற்சிகளுக்கு இடமில்லாமல் போயிருக்கிறது.

2022 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டன் ஆனதின் மூலம் முழு நேர கேப்டனுக்கு முதல் அடியை எடுத்து வைத்தார். இதற்கு அடுத்து அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை, அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்ததின் மூலம் இந்திய அணி இழந்தது.

இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரை இந்திய டி20 அணியில் இருந்து விலக்கி வைத்தது. தற்பொழுது இந்த மூவரில் இருவர் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக திரும்பி இருப்பதின் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய உலக சாதனை ஒன்றை படைப்பதற்கான உச்சபட்ச வாய்ப்பில் இருக்கிறார். அதாவது கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்கின்ற சாதனை அவர் வசம் வர இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அஸ்கர் ஆப்கான், இந்தியாவின் மகேந்திர சிங் தோனி, பாகிஸ்தானின் பாபர் அசாம் இங்கிலாந்தின் இயான் மோர்கன், உகாண்டாவின் பிரைன் மசாபா ஆகியோர் தங்கள் அணிக்கு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 42 வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் 40 வெற்றிகள் உடனும், இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா 39 வெற்றிகள் உடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

தற்பொழுது இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் பொழுது, உலகளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் இருக்கின்ற வரிசையில் ரோஹித் சர்மா 42 வெற்றிகள் உடன் மற்றவர்களுடன் இணைவார்.

இதற்கு அடுத்து டி20 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை அவர் பெறும் பொழுது, டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்கின்ற உலகச் சாதனைக்கு தனி வீரராக சொந்தக்காரராக மாறுவார். இதன் மூலம் 42 வெற்றிகள் உடன் இருக்கும் மகேந்திர சிங் தோனியின் டி20 கிரிக்கெட் கேப்டன் சாதனை முறியடிக்கப்படும்!