ரோகித் சர்மாவுக்கு ஒரு ஐடியா சொல்றேன், இந்திய அணி நல்லாருக்கணும்னா இதை மட்டும் பண்ணுப்பா – கவாஸ்கர் அறிவுரை!

0
2707

ரோகித் சர்மா ஐபிஎல் விட்டு விலகி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கவனம் செலுத்தலாம். இது இந்திய அணிக்காக எடுக்கப்படும் சிறந்த முடிவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஏழு போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று, நான்கு தோல்விகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இதில் ரோகித் சர்மா 7 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். 181 ரன்கள் மொத்தமாக அடித்திருக்கும் இவரது சராசரி 25க்கும் சற்று அதிகமாக இருக்கிறது. மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் இம்முறை மிகுந்த கேள்விக்குறிவாகவும் மாறி வருகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி திட்டங்கள் வகுத்து முழு உடல் தகுதியுடன் இருப்பதற்கு சில முடிவுகள் எடுக்கலாம் என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

“உண்மையை சொல்லப் போனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் லைன்-அப் கொஞ்சம் மாற்றி அமைக்க வேண்டும். ரோகித் சர்மா சில போட்டிகள் வெளியில் ரெஸ்ட் எடுக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பைனலுக்கு என்னென்ன திட்டங்கள் வகுக்கலாம் என்பதை பற்றி சிந்திக்கலாம். ரோகித் சர்மா, கடைசி சில முக்கியமான போட்டிகளில் மீண்டும் அணியுடன் இணைந்து செயல்படலாம்.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மா செயல்பட்டு வரும் விதம் மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது. இது இந்திய அணிக்கும் ஏற்றது அல்ல. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ரோகித் சர்மா எத்தகைய முக்கியமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் முன்னிலையில் இருந்து செயல்படாமல் இப்படி ஏமாற்றம் அளிக்கும் விதமாக செயல்படுவது அணிக்கு கூடுதல் ஆபத்தாக முடிந்துவிடும்.” என்று கூறினார்.