ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கக் காத்திருக்கும் ரோகித் சர்மா… அதற்கு கொல்கத்தா அணிகெதிராக என்ன செய்யவேண்டும்? – ரிப்போர்ட்!

0
4475

ஐபிஎல் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் என்ன செய்தால் இந்த மைல்கல்லை நெருங்குவார்? மற்றும் இதனை செய்துக்காட்டவுள்ள எத்தனையாவது வீரர்? ஆகியவற்றை பின்வருமாறு காண்போம்.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் 22-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதில் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் விளாசி மீண்டும் பார்மிற்கு வந்திருக்கிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் அடித்தார். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அரைசதம் அடித்திருக்கிறார்.

மேலும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கும் தயாராகி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 230 போட்டிகள் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 5966 ரன்கள் அடித்திருக்கிறார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் அடித்தால், 6000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார். இதனை செய்த நான்காவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகலாம். இதற்கு முன்னர் விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.

- Advertisement -

அத்துடன் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 250 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகலாம். புதிய மைல்கல்லையும் எட்டலாம். முதல் இரண்டு இடங்களில் கிரிஸ் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இருக்கின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்

  1. விராட் கோலி – 6898 ரன்கள்
  2. ஷிகர் தவான் – 6477 ரன்கள்
  3. டேவிட் வார்னர் – 6109 ரன்கள்
  4. ரோகித் சர்மா – 5964 ரன்கள்
Rohit sharma, shikhar dhawan, virat kohli

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்

  1. கிரிஸ் கெயில் – 357 சிக்ஸர்கள்
  2. ஏபி டி வில்லியர்ஸ் – 251 சிக்ஸர்கள்
  3. ரோகித் சர்மா – 245 சிக்ஸர்கள்