” இன்னும் 108 ரன்கள் தான் ; அடித்துவிட்டால் சச்சின், தோனி, கோலி, டிராவிட் ஆகிய நட்சத்திர வீரர்கள் படைத்த சாதனைப் பட்டியலில் இணையலாம் ” செய்வாரா ரோஹித் ஷர்மா ?

0
94
Rohit sharma break records

இந்திய அணி கடந்த மாதத்தில் இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்தது. கடந்த ஆண்டு கோவிட்டால் நிறுத்தப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியிலும், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் தொடரை சமன் செய்து, மற்ற இரண்டு தொடர்களையும் 2-1 என கைப்பற்றி அசத்தியது!

இதையடுத்து மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் சென்றது இந்திய அணி. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி இன்று துவங்குகிறது. ஓய்வளிக்கப்பட்டதில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா மூவரும் அணிக்குத் திரும்புகிறார்கள். அதேபோல் கோவிட்டால் பாதிக்கப்பட்ட கே.எல்.ராகுலுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ் இருவரும் மீண்டும் அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள்.

இந்த ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரு புதிய சாதனைகளை எட்டும் தூரத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா இன்னும் 108 ரன்களை அடித்தால் சர்வதேச போட்டிகளில் 16,000 ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் எலைட் பட்டியலில் நுழைவார். இதில் சச்சின் 34,357, ராகுல் டிராவிட் 24,208, விராட் கோலி 23,726, சவுரவ் கங்குலி 18, 575, எம்.எஸ்.தோனி 17,266, வீரேந்தர் சேவாக் 17,253 ஆகியோர் உள்ளனர்.

தற்போது ஸ்காட்லாந்து அணியுடன் டி20 தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்திருந்த ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்து 3399 ரன்களோடு இருக்கிறார். இதில் ரோகித் சர்மா 3399, விராட் கோலி 3308, பால் ஸ்டிர்லிங் 2894, ஆரோன் பின்ஞ் 2855 ஆகியோர் உள்ளனர். வெஸ்ட் இன்டீஸ் உடனான டி20 தொடரில் மீண்டும் டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!

- Advertisement -