ஹை பிரஷர் சதம்.. WTC ரோகித் சர்மா வெயிட்டான சாதனை.. ஜோரூட்டை கீழே இறக்கினார்

0
237
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்குமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மிகவும் முக்கியமான தொடர்.

ரவீந்திர ஜடேஜா கே எல் ராகுல் ஆகிய மூத்த வீரர்கள் இரண்டாவது இடத்தில் இல்லை. விராட் கோலி ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்குமே இல்லை. தற்பொழுது கேஎல் ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் காயத்தால் விலகி இருக்கிறார்.

- Advertisement -

இத்தோடு சேர்த்து பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால் ஆறு டெஸ்ட் போட்டிகளிலும், சுப்மன் கில் 22 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய குறைந்த அனுபவத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான இளம் வீரர்களை வைத்துக்கொண்டு கேப்டனாக உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.

அதே சமயத்தில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக ஒரு அரை சதம் கூட வரவில்லை. கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் சாதிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் கில் மற்றும் ரஜத் பட்டிதார் மூவரும் பேட்டிங்கில் மிகவும் ஏமாற்றம் அளித்து, 33 ரன்கள் அணி எடுத்திருந்தபொழுது வெளியேறினார்கள்.

இப்படியான இக்கட்டான நிலைமையில் ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு ரோகித் சர்மா மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். வழக்கமாக விளையாடும் அட்டாக்கிங் பேட்டிங் முறையை ஒதுக்கி வைத்து விட்டு, பந்தை பார்த்து பாரம்பரிய டெஸ்ட் முறையில் விளையாடினார். 71 பந்துகளில் ரோஹித் சர்மாவுக்கு எட்டு இன்னிங்ஸ்கள் கழித்து அரை சதம் வந்தது.

இதற்குப் பிறகு தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விளையாடிய இந்த ஜோடி விக்கெட்டை தரவில்லை. தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே சதம் அடிக்கும் வாய்ப்பை ரோகித் சர்மா எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து பொறுமையாகவே விளையாடினார்.

இதற்குப் பிறகு தேநீர் இடைவேளை முடிந்து வந்த ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார். 157 பந்துகளில் 12 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் ரோகித் சர்மாவுக்கு சதம் வந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு இது 11வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சதமாகும். இங்கிலாந்துக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய அணிக்காக ரோகித் சர்மா எட்டு சதங்கள் அடித்திருக்கிறார். அடுத்த இடத்தில் நான்கு சதங்கள் உடன் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 5 இன்னிங்ஸ் முதல் முறை.. 260 பந்து.. ஹிட்மேன் ரோகித் ராஜ்கோட் ராஜா ஜடேஜா ராஜ்யம்

மேலும் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள் அடித்தவராக விராட் கோலி 80, டேவிட் வார்னர் 49 என முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். ஜோ ரூட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நாற்பத்தி ஆறு சதங்கள் எடுத்து மூன்றாவது இடத்தை பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் தற்பொழுது சர்வதேச 47 வது சதம் அடித்து ரூட்டை கீழே தள்ளி ரோகித் சர்மா மேலே சென்று இருக்கிறார்.