இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து விலகினார்.
அதற்கான பல்வேறு காரணங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரோகித் சர்மாவே தற்போது அதன் உண்மையான விளக்கத்தை கூறியிருக்கிறார்.
ஐந்தாவது போட்டியில் விலகிய ரோஹித்
பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் அவர் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியும், மூன்றாவது போட்டி டிரா மற்றும் நான்காவது போட்டியில் தோல்வியும் என இந்திய அணி தோல்வி பாதையில் இருந்தது. மேலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்மும் சரியாக இல்லாத காரணத்தால் ரோஹித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தன.
இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கேப்டனாக மீண்டும் பும்ராவே பொறுப்பேற்றார். மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் இடத்தை நிரப்ப கில் வாய்ப்பு பெறுகிறார் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறார் எனவும் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் என்று பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் உண்மைத்தன்மையை ரோகித் சர்மாவே தற்போது கூறி இருக்கிறார்.
50 விமர்சனங்கள் என்னை சுற்றி வரும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் இப்போது சரியாக இல்லை அதைத்தான் சொல்வேன். 50 வார்த்தைகள் என்னை சுற்றி வீசப்படும். பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுடன் நடத்திய ஆலோசனை மிகவும் எளிதானது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை மேலும் நான் பார்மில் இல்லை. ஆனால் ஐந்தாவது போட்டி என்பது மிகவும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய போட்டி. இதனை நான் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதையும் படிங்க:இதுதான் கிரிக்கெட்.. நியாயமாக நடந்த ஜிம்பாப்வே வீரர்.. கைத்தட்டி மரியாதை செலுத்திய ரஷித் கான்.. என்ன நடந்தது?
இது உன்னுடைய ஆட்டம், உனது ஆட்டம் நன்றாக தெரியும் என்று சொன்னார்கள். நான் எதிர்காலம் பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. இந்த நேரத்தில் அணிக்கு இது போன்ற சிந்தனை தான் தேவை. நான் சிட்னி மைதானத்திற்கு வந்த பிறகு இந்த முடிவை எடுத்தேன். கடைசி டெஸ்ட் முடிந்து மூன்று நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் அந்த தினம் புத்தாண்டு என்பதால், அன்று நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஆனால் அது எனக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது” என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.






